தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று தூத்துக்குடி அருகே உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் தூத்துக்குடியில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி அருகே உள்ள அரசடி துணை மின்நிலையம், கொம்புக்கார நத்தம் மின்நிலையத்தில் வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் அரசடி துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான மேல அரசடி, கீழ அரசடி, சமத்துவபுரம், தருவைகுளம் மற்றும் பட்டினமருதூர் உப்பளம் சார்ந்த பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், எட்டயபுரம் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற 25ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று மின்சார வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் AIIMS மருத்துவமனைகளுக்கு பெயர் தேர்வு – முக்கிய தகவல் வெளியீடு!

இதனை தொடர்ந்து கொம்புக்கார நத்தம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தா குறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம், ராமசாமி புரம் புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கொல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!