பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய தனம் – இவருக்கு பதில் இனி இவர் தான்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய தனம் - இவருக்கு பதில் இனி இவர் தான்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய தனம் - இவருக்கு பதில் இனி இவர் தான்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய தனம் – இவருக்கு பதில் இனி இவர் தான்!

முல்லைக்கு குழந்தை பிறக்குமா, பிறக்காதா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுஜிதா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டு குடும்ப வாழ்க்கையை மக்களுக்கு அப்படியே படம் போட்டு காட்டி கொண்டிருப்பதால் மக்கள் அதிகமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரினை விரும்பி பார்த்து வருகின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முல்லை சிகிச்சை எடுத்துக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

குழந்தை பிறக்காததை முல்லை மிகப் பெரிய குறையாக நினைத்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களின் முகத்தை கூட பார்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார். மேலும், செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள நிறைய செலவாகும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தினர்கள் விழித்து கொண்டிருக்கின்றனர். பின்பு, முல்லை கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் மூர்த்தி தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம். முல்லைக்கு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் வீடு கட்ட ஆரம்பிக்கலாம் என கூறுகிறார்.

இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை – அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்! குஷியில் ரசிகர்கள்!

ஆனால், மீனாவிற்கு இந்த பிளான் சுத்தமாக பிடிக்கவே இல்லை. அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என சொல்லி சண்டை போடுகிறார். இதற்கு பிறகும் முல்லை செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுஜிதா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுஜிதாவிற்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சுசித்ரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here