தமிழகத்தில் டிச.15ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!

0
தமிழகத்தில் டிச.15ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் டிச.15ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் டிச.15ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் வரும் டிச.15ம் தேதியுடன் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் இக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.13) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

முழு ஊரடங்கு

கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2ம் அலைத்தொற்று பாதிப்புகள் தீவிரமடைந்து வந்ததையடுத்து தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் ஆனது நோய் பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து சில தளர்வுகளுடன் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் டிச.15ம் தேதியன்று முடிவுக்கு வர இருக்கிறது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மீண்டும் வரும் வெண்பா பரினா – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இதற்கிடையில் இந்தியாவில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை தாக்கியுள்ள நிலையில் தமிழகத்தில் இந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.13) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள்!

அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைமை செயலர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் ஆகியோருடன் முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!