ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரரின் உடல் தமிழகம் வருகை – இன்று நல்லடக்கம்!

0
ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரரின் உடல் தமிழகம் வருகை - இன்று நல்லடக்கம்!
ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரரின் உடல் தமிழகம் வருகை - இன்று நல்லடக்கம்!
ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரரின் உடல் தமிழகம் வருகை – இன்று நல்லடக்கம்!

ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊர் கொண்டு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த லக்ஷ்மணன் உடலுக்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வீரமரணம்:

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ராணுவ வீரர்கள் தான். இந்திய எல்லையில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதவாறு பாதுகாத்து வருகின்றனர். அண்டை நாடுகளின் போர் தாக்குதல்கள், ஊடுருவல்கள் ஆகியவற்றில் இருந்து நம் நாட்டை பாதுகாக்கின்றனர். நம் நாடு அமைதியான சூழ்நிலையில் இருக்க ராணுவ வீரர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு நாட்டுக்காக உழைத்து வருகின்றனர். மேலும் நாட்டிற்காக உயிர் தியாகங்கள் செய்கின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தமிழகத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இந்தியாவை சேர்ந்த சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபில் மேன் மனோஜ் குமார், ரைபில் மேன் லக்ஷ்மணன் ஆகியோர் உயிரிழந்த ராணுவ வீரர்கள் ஆவர். இவர்களில் லக்ஷ்மணன் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அத பார்கள் பகுதியில் உள்ள ராணுவ முகாமின் தடுப்பு வேலியை தாண்ட சில பயங்கரவாதிகள் முயற்சித்துள்ளனர். இதை அறிந்த ராணுவ வீரர்கள் அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் நடைபெற்ற தாக்குதலில் மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.

75 ஆவது சுதந்திர தின சிறப்பு ப்ரீப்பெய்டு ப்ளான் – Reliance Jio அறிமுகம்

Exams Daily Mobile App Download

இந்நிலையில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும் ஹைதராபாத்தில் இருந்து காலை 10:20 மணிக்கு புறப்பட்டு 11:50 மணிக்கு மதுரை விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது. உயிரிழந்த லக்ஷ்மணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள். சட்டமன்ற ;உறுப்பினர்கள், ஆட்சியர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் உட்பட அரசு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!