வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் (WFH) கவனத்திற்கு – சிறந்த உணவு பழக்க வழக்கங்கள்!

0
வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் (WFH) கவனத்திற்கு - சிறந்த உணவு பழக்க வழக்கங்கள்!
வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் (WFH) கவனத்திற்கு - சிறந்த உணவு பழக்க வழக்கங்கள்!
வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் (WFH) கவனத்திற்கு – சிறந்த உணவு பழக்க வழக்கங்கள்!

வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் அதிக நேரம் கணினி, தொலைபேசி போன்ற சாதனங்களில் நேரத்தை செலவிடுகின்றனர். இவர்கள் நல்ல புரத உணவுகளை உட்கொள்வது அவசியம். கண்ணிற்கு குளிர்ச்சி அளிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியம் :

வளர்ந்து வரும் தொழில்நூட்ப வளர்ச்சியால் வேலைகள் எளிதாகி விட்டது. ஆனால் உடல் நலம் மோசமாகி விட்டது. அமர்ந்த இடத்திலிருந்து அனைத்து வேலைகளையும் இணையம் மூலம் மக்கள் எளிதாக செய்து விடுகின்றனர். உடல் உழைப்பு இல்லாததால் உடலில் உள் உறுப்புகள் வீணாகி விடுகிறது. கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை அதிகம் உபயோகிப்பதால் இளம் வயதிலேயே பார்வை கோளாறு ஏற்படுகிறது. அதனால் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

அலுவலக பணியாளர்கள், ஐ.டி துறையினர், இன்னும் பல துறைகள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்டுள்ளன. வீடுகளில் உள்ள பிரச்சனைகளும், அலுவலகத்தின் வேலை பளுவாலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து நாள் முழுவதும் பணி செய்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆரோக்கியமான உணவுகளை தினந்தோறும் உண்பது அவசியமாகும். பார்வையை பாதுகாக்கவும் வைட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும். முளைகட்டிய தானியங்கள், இயற்கை பானங்களை அவ்வப்போது அருந்த வேண்டும்.

தமிழக கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

மாவு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து புரத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை தவிர்த்து ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவைகளை அதிக அளவும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். பசித்த பின் மட்டுமே சாப்பிடப் பழக வேண்டும். இதனை கடைப்பிடித்து வந்தால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டுமே வேலைகளை சிறப்பாக செய்ய முடியும். எனவே கொரோனா போன்ற காலகட்டத்தில் உடல்நலம் பேணுவதில் அக்கறை கொள்ளுங்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!