Apple iPhone 13 சீரிஸ் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியீடு – செப்.17 முதல் முன்பதிவு துவக்கம்!

0
Apple iPhone 13 சீரிஸ் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியீடு - செப்.17 முதல் முன்பதிவு துவக்கம்!
Apple iPhone 13 சீரிஸ் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியீடு - செப்.17 முதல் முன்பதிவு துவக்கம்!
Apple iPhone 13 சீரிஸ் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியீடு – செப்.17 முதல் முன்பதிவு துவக்கம்!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸின் அடுத்த வகை மாடல்களை நேற்று (செப்டம்பர் 14) அறிமுகம் செய்தது. இந்த மாடல்களின் இந்திய விலை மற்றும் வெளியீடு குறித்த விளக்கங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபோன்

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸின் அடுத்த மாடல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்ற லான்ச் விழாவில், ஐபோன் 13 சீரிஸுக்கான முன்பதிவு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐபேட் உள்ளிட்ட 4 புதிய தொலைத் தொடர்பு கருவிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்!

இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிக் குக், ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற 4 ஐபோன் மாடல்களை வெளியிட்டார். இதில் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவை 128 GB, 256 GB மற்றும் 512 GB மெமரியுடன் வெளியாகியுள்ளது. இவற்றில் டூயல்12 MB வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதே போல ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவை 1 TB மெமரியுடன் வந்துள்ளது.

மேலும் இவ்வகை மாடல்களிலும் 2 MB டெலிபோட்டோ வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த 4 மாடல்களிலும் முன்பக்க கேமரா 12 மெகா பிக்சல் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஐபோன் சீரிஸ்களில் புகைப்படங்களை பிசிறு இல்லாமல் துல்லியமாக எடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர்ச்சியாக 28 மணி நேரம் வரையும் வீடியோ காட்சிகளை இதில் பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

செப்.17 முதல் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு!

இப்போது ஐபோன் 13 மாடல்களுக்கான முன்பதிவு வரும் 17 ஆம் தேதி துவங்குகிறது. ஆன்லைன் தளம் மூலம் துவங்கும் ஐபோன் 13 சீரிஸ் விற்பனை செப்டம்பர் 24 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைகளில் ஆப்பிள் 13 சீரிஸ் ஐபோன்களின் விலை கீழ்கண்டவாறு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

  • ஐ போன் 13 மினி, 128 GB – ரூ.69,900
  • ஐ போன் 13 மினி, 256 GB – ரூ.79,900
  • ஐ போன் 13 மினி, 512 GB – ரூ.99,900
  • ஐ போன் 13, 128 GB – ரூ.79,900
  • ஐ போன் 13, 256 GB – ரூ.89,900
  • ஐ போன் 13, 512 GB – ரூ.109,900
  • ஐ போன் 13, ப்ரோ 128 GB – ரூ.1,19,900
  • ஐ போன் 13, ப்ரோ 512 GB – ரூ.1,49,900
  • ஐ போன் 13, ப்ரோ 1 TB – ரூ.1,69,900
  • ஐபோன் 13, ப்ரோ மேக்ஸ் 128 GB – ரூ.1,29,900
  • ஐபோன் 13, ப்ரோ மேக்ஸ் 512 GB – ரூ.1,58,900
  • ஐபோன் 13, ப்ரோ மேக்ஸ் 1 TB – ரூ.1,79,900

என்றாலும் இதன் உண்மையான விலை நிலவரம் விற்பனை துவங்கும் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!