நாடு முழுவதும் தீவிரமடையும் அக்னிபாத் போராட்டம் – சென்னையிலும் துவங்கியது!

0
நாடு முழுவதும் தீவிரமடையும் அக்னிபாத் போராட்டம் - சென்னையிலும் துவங்கியது!
நாடு முழுவதும் தீவிரமடையும் அக்னிபாத் போராட்டம் - சென்னையிலும் துவங்கியது!
நாடு முழுவதும் தீவிரமடையும் அக்னிபாத் போராட்டம் – சென்னையிலும் துவங்கியது!

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், இந்த திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தற்போது தமிழகத்திலும் போராட்டங்கள் துவங்கி இருக்கிறது.

அக்னிபாத் போராட்டம்

இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ‘அக்னிபாத்’ என்ற புதுமையான திட்டத்தை அறிவித்த மத்திய அரசுக்கு எதிராக இப்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் 4 ஆண்டுகள் வரை ராணுவ வீரர்களாக பணிபுரிய முடியும். தொடர்ந்து அந்த 4 ஆண்டு காலம் முடியும் போது பயிற்சியில் இருந்த ராணுவ வீரர்களில் 25% பேர் மட்டுமே பணியில் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 17 வயது முதல் 21 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டம் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவதாக கருதிய பலரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் கிட்டத்தட்ட 10 மாநிலங்களில் துவங்கி இருக்கிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பீகார் மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதற்கிடையில் பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் துவங்கிய இந்தப் போராட்டம் இப்போது தென் மாநிலங்களிலும் பரவி இருக்கிறது.

அந்த வகையில் தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரயில்களுக்கு தீ வைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், பீகாரில் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மாநில துணை முதல்வர் ரேணு தேவியின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வன்முறையை தடுக்கும் விதமாக பீகாரின் 12 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதே போல உத்தர பிரதேசத்தின் பல்லியா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

இதுவரை நாடு முழுவதும் 12 ரயில்கள் தீவைக்கப்பட்டுள்ள நிலையில் 214 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ராணுவத்தில் சேருவதற்கு தயாராகி வரும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, இந்திய ராணுவத்துக்காக உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை முடிந்து பயிற்சியில் சேரத் தயராகும் நிலையில் இது போன்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது மாணவர்களை போராட்டத்தில் குதிக்க வழிவகுத்தது. இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here