நாட்டின் 5வது பரபரப்பான விமான நிலையம் “சென்னை” – வெளியான முக்கிய தகவல்!

0
நாட்டின் 5வது பரபரப்பான விமான நிலையம்
நாட்டின் 5வது பரபரப்பான விமான நிலையம் “சென்னை” – வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதனால் சென்னையில் புதிதாக விமான நிலையம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நாட்டின் பரபரப்பான விமான நிலையத்தில் ஒன்றாக சென்னை விளங்குவதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதனால் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அளவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி நாட்டில் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு பிறகு நாட்டின் 5வது பரபரப்பான விமான நிலையமாக சென்னை விமான நிலையம் மாறியுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, சென்னை விமான நிலையத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 3.45 லட்சம் மற்றும் 3.88 லட்சம் பயணிகள் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த ஜூலையில் மட்டும் 4.29 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே துறையின் குரூப் D தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு – தமிழக தேர்வர்கள் அதிருப்தி!

கடந்த 2014ம் ஆண்டில் சென்னை விமான நிலையம் நாட்டிலே 3வது பரபரப்பான விமான நிலையமாக இருந்த நிலையில் தற்போது (2022) நாட்டிலே 5வது பிஸியான விமான நிலையமாக மாறியுள்ளது. ஆனால் உள்நாட்டுப் பயணிகள் போக்குவரத்தை ஒப்பிடும் போது மற்ற மெட்ரோ நகரங்களை விட சென்னை விமான நிலையம் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனால் இதனை அதிகரிக்கும் விதமாக உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஆகாசா ஏர் நிறுவனமானது சென்னையில் இருந்து பெங்களூர், மும்பை மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து விமான சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!