மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியில் இணையும் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி!

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அணியில் இணையும் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அணியில் இணையும் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியில் இணையும் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி!

நடப்பு சீசனில் கடந்த 8 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருக்கும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன், இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்தில் MI அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.

மும்பை இந்தியன்ஸ்

கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளின் 44வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இந்த சீசனில் கடந்த 8 ஆட்டங்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் (MI) அணி ஒன்றில் கூட வெற்றி பெறாமல் தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வகித்துள்ளது. கடந்த 14 சீசன்களில் 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் ஆரம்பம் முதலே கடுமையான தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது.

காவல்துறையில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு, 125 VAO காலிப்பணியிடங்கள் – முதல்வர் அறிவிப்பு!

இப்போது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆட்டத்திலும் பேட்டிங் பிரிவு நிலையாக இருந்தால், பந்து வீச்சு சரியாக அமையவில்லை. மற்றபடி, பந்து வீச்சு பிரிவு சிறப்பாக செயல்பட்டால் பேட்டிங் சொதப்பி விடுகிறது. மொத்தத்தில் MIன் பிளேயிங் 11 அணி ஒரு முழுமையான பதத்தில் இல்லை. குறிப்பாக ரோஹித் ஷர்மா, பொல்லார்ட், இஷான் கிஷான், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இன்னும் தங்களது திறமையை முழுதாக வெளிப்படுத்தவில்லை. அதிலும் பந்து வீச்சு பிரிவில் ஜஸ்பிரிட் பும்ரா ஒரு நிலையான பார்மில் இல்லை.

இப்போது வேகப்பந்து வீச்சாளர்களின் முடிவில்லாத போராட்டத்தால் விரக்தியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியில் அனுபவமிக்க வீரர் தவால் குல்கர்னி இணைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் பயிற்சி அமர்வுகளில் சிறப்பாக செயல்பட்டால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு பரிசீலிக்கப்படலாம். தற்போது 33 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி, ஐபிஎல்அணியின் பயோ பபூளிள் இணைந்துள்ளார். விரைவில் அவர் பயிற்சியைத் தொடங்க இருக்கிறார். இப்போது MI அணியில் இணைவதற்கு முன்பாக குல்கர்னி, ஸ்டார் ஸ்போர்ட்ஸின் வர்ணனைக் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.

இதுவரை மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 8 போட்டிகளில் 229 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த சீசனில் மோசமாக போராடி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான ஜெய்தேவ் உனட்கட் (ஐந்து போட்டிகளில் 6 விக்கெட்டுகள் மற்றும் 190 ரன்கள் விட்டுக்கொடுத்தார்) மற்றும் டேனியல் சாம்ஸ் (ஐந்து போட்டிகளில் 6 விக்கெட்டுகள் மற்றும் 209 ரன்கள் விட்டுக்கொடுத்தார்) ஆகியோரின் செயல்பாடுகள் மிகவும் சாதாரணமாக இருந்தது.

அதே போல வேகப்பந்து வீச்சாளர்களான டைமல் மில்ஸ் (ஐந்து போட்டிகளில் இருந்து 6 விக்கெட்டுகள் மற்றும் 190 ரன்கள் விட்டுக்கொடுத்தார்) மற்றும் பசில் தம்பி (ஐந்து போட்டிகளில் இருந்து 5 விக்கெட்டுகள் மற்றும் 152 ரன்கள் விட்டுக்கொடுத்தார்) ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தவிர, ரிலே மெரிடித் இரண்டு ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்டாலும், அவர் 65 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இப்போது MI அணியின் வேகப்பந்து வீச்சு பிரிவில் இனைந்திருக்கும் தவால் குல்கர்னி, அணியின் முதல் வெற்றிக்கு வித்திடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!