தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் – கடைசி நாள் மார்ச் 4 !

0
தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் - கடைசி நாள் மார்ச் 4 !
தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் - கடைசி நாள் மார்ச் 4 !
தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் – கடைசி நாள் மார்ச் 4 !

தங்கத்தில் தனது முதலீட்டை செலுத்த விரும்புவோர் தங்க பத்திரம் என்கிற முறையின் மூலமாகவும் பயனடையலாம். இன்றில் இருந்து தங்கப் பத்திரம் விற்பனை 22 துணை தபால் நிலையங்களில் மார்ச் 4 வரை நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தங்கப் பத்திரம் விற்பனை:

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் பன்மடங்காக அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் நகைப்பிரியர்கள் நகை வாங்குவதில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு நடுவே நடைபெறும் போரால் பங்கு சந்தை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையும் தாறுமாறாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இன்று பங்கு சந்தை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,504-க்கு விற்பனையாகி வருகிறது மற்றும் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,813-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு வாரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – இன்று மீண்டும் திறப்பு! மார்ச் 4 வரை மக்கள் நடமாட தடை!

அதிக விலை கொடுத்து வாங்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைப்பது மிக பெரிய சிக்கலாகி வருகிறது. தான் சேமிக்கும் தொகையை தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் அந்த தங்கம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் மற்றும் வட்டி தொகையும் பெற வேண்டும் என நினைத்தால் தங்கப் பத்திரம் முறையை பின்பற்றலாம். தங்கம் பத்திரம் வடிவில் பாதுகாப்பாக வங்கிகளில் இருக்கும். ஒரு ஆண்டில் மட்டுமே 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். 5 ஆண்டுகள் கழித்து முதலீட்டை பெற்றுக்கொள்ளலாம். 8 ஆண்டுகள் கழித்து நாம் சேமித்த தங்கத்தில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணம் கிடைக்கும்.

TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!

மத்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் தான் வழங்கி வருகிறது. இந்த தங்க பத்திர விற்பனை தபால் நிலையங்களில் இன்று (28-ம் தேதி) முதல் மார்ச் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109 ஆகும். சென்னை மத்தியக் கோட்டத்தில் உள்ள தி.நகர் தலைமை தபால் நிலையம், மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் உட்பட 22 துணை தபால் நிலையங்களிலும் இந்த தங்கப் பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதோ ஒரு ஆவணம் மற்றும் பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை தபால் நிலையத்தில் கொடுத்து தங்க பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மத்தியக் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா.டி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!