TRPயில் முதலிடம் பிடித்த “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் – முதல் நாளே சாதனை!

0
TRPயில் முதலிடம் பிடித்த
TRPயில் முதலிடம் பிடித்த "தமிழும் சரஸ்வதியும்" சீரியல் - முதல் நாளே சாதனை!
TRPயில் முதலிடம் பிடித்த “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் – முதல் நாளே சாதனை!

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் முதல் நாள் எபிசோடில் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழும் சரஸ்வதியும்:

விஜய் டிவியில் கடந்த ஜூலை 17 முதல் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மாறுபட்ட கதைக்களத்துடன் தொடங்கி உள்ளது. இந்த நாடகத்தின் ஹீரோ தமிழ் (தீபக்) குடும்பத்தின் மூத்த மகன் ஆவார். அம்மா, அப்பா, தம்பி, தங்கை என குடும்பம் கலகலப்பாக உள்ளது. அம்மாவின் பிசினஸை கவனித்துக் கொள்ளும் பொறுப்பான மகனாக உள்ளனர். அதேபோல அம்மா சொல்படி கேட்கிற மகனாகவும் இருக்கிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியல் செய்த சாதனை, படப்பிடிப்பில் கொண்டாடட்டம் – ரசிகர்கள் வாழ்த்து!

குடும்ப சூழல் காரணமாக அவர் 10 ஆம் வகுப்பு படிக்காமல் உள்ளார். ஆனால் அவரது தங்கை மற்றும் தம்பி நன்றாக படித்துள்ளனர். முதல் எபிசோடிலேயே தமிழின் அம்மா அனைவர்க்கும் அருகம்புல் ஜூஸ் போட்டு தந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அடுத்தடுத்த எபிசோடுகளில் ஹீரோயின் சரஸ்வதி (நட்சத்திரா) அறிமுகம் நடைபெற்றது. தமிழால் சூழல் காரணமாகவே பத்தாவதைத் தாண்ட முடியவில்லை. சரஸ்வதியோ படிப்பு மண்டையில் ஏறாததால் பன்னிரண்டாவதைத் தாண்ட முடியாமல் பாடுபடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

படிப்பு என்கிற ஒரு விஷயமே இவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரி நேர்கோட்டில் சந்திக்க செய்கிறது. படிப்பு குறைவு என்கிற ஒரு காரணத்தாலேயே பல்வேறு அவமானங்களை இவர்கள் சந்திப்பதெல்லாம் கதையில் அடுத்தடுத்து நடக்கின்றன. இந்நிலையில் இந்த சீரியலில் முதல் நாளில் டி.ஆர்.பி. ரேட்டிங் புள்ளி விபரப்படி அதிக புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. சீரியல் ரசிகர்கள் தொடர்ந்து அந்த சீரியலைப் பார்ப்பார்களா என்பதை இதை வச்சே ஓரளவுக்கு கணிக்க முடியும் என சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here