சரஸ்வதிக்கு குங்குமம் வைக்கும் தமிழ், கோவிலில் அரங்கேறிய காதல் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

0
சரஸ்வதிக்கு குங்குமம் வைக்கும் தமிழ், கோவிலில் அரங்கேறிய காதல் - 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ!
சரஸ்வதிக்கு குங்குமம் வைக்கும் தமிழ், கோவிலில் அரங்கேறிய காதல் - 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ!
சரஸ்வதிக்கு குங்குமம் வைக்கும் தமிழ், கோவிலில் அரங்கேறிய காதல் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்:

விஜய் டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து ஒளிபரப்பப்பட்டு வரும் மெகா தொடர் தான் ‘தமிழும் சரஸ்வதியும்’. இந்த சீரியலில் தற்போது சரஸ்வதிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பற்றிய உண்மைகளை தமிழ் கண்டறிந்து, திருமணத்தையும் நிறுத்தி விடுகிறார். இதனால் தற்போது தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் இடையேயான காதல் அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழுக்கு பெண் தேடுவதையும் அவரது அம்மா கோதை செய்து வருகிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் நமிதாவிற்கு கொரோனா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சரஸ்வதி தான் எப்போதும் செல்லும் கோவிலுக்கு செல்லுகிறார். அப்போது மனதில் உண்மையான நேசம் இருந்தால் தமிழும் இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அதே போலவே தமிழும் கோவிலுக்கு வருகிறார். அங்கு தான் வழக்கமாக தரிசிக்கும் சரஸ்வதியை சென்று வணங்குகிறார். தனக்கு சரஸ்வதியை பார்த்த நாளில் இருந்து பிடித்திருந்தது என்றும் அவரையே திருமணம் செய்ய விருப்பப்படுவதாகவும் கூறுகிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் எலிமினேட் ஆகும் இசைவாணி? முதல் நாமினேஷன் தொடக்கம்!

அப்போது சரஸ்வதி எப்போதும் போல தூணிற்கு பின் மறைந்து நின்று பேசுகிறார். அப்போது தமிழ் சரஸ்வதி தான் இத்தனை நாட்களாக கடவுள் சரஸ்வதி போல பேசுகிறார் என்பதனை கண்டுபிடித்து விடுகிறார். பின்னர், தமிழ் அவருக்கு நெற்றியில் குங்குமம் வைத்து விடுகிறார். மழை பெய்ததும் இருவரும் நனைகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது. இனி வரும் நாட்களில் காதல் காட்சிகளுடன் கூடிய எபிசோட் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!