ஆங்கிலத்தில் பேச தெரியாமல் தடுமாறும் தமிழ் – சந்திரகலா போட்ட சதியில் இருந்து மீள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!

0
ஆங்கிலத்தில் பேச தெரியாமல் தடுமாறும் தமிழ் - சந்திரகலா போட்ட சதியில் இருந்து மீள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
ஆங்கிலத்தில் பேச தெரியாமல் தடுமாறும் தமிழ் - சந்திரகலா போட்ட சதியில் இருந்து மீள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
ஆங்கிலத்தில் பேச தெரியாமல் தடுமாறும் தமிழ் – சந்திரகலா போட்ட சதியில் இருந்து மீள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!

தமிழ் நடத்திவரும் கம்பெனிக்கு ஆர்டரை வாங்க ஒரு நிறுவனத்திற்கு செல்கிறார். அங்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாமல் தமிழ் தடுமாறி அந்த நிறுவனர் தமிழை திட்டி விடும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழும் சரஸ்வதியும்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் கம்பெனி விஷயத்தில் எப்படியாவது தமிழை தோற்கடித்தே தீரவேண்டும் என சந்திரகலா நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் அதையும் தாண்டி வெற்றி பெறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்திலிருந்தே தமிழின் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. முதலில் படிக்காத தமிழுக்கு படித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோதை திட்டம் போட்டிருந்தார்.

பல வருடம் கழித்து மீண்டும் சீரியலில் அறிமுகமாகும் ‘திருமதி செல்வம்’ அர்ச்சனா – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் தமிழ் சரஸ்வதியை காதலித்ததால் சரஸ்வதி MBA படித்திருக்கிறார் என பொய் சொல்லி கோதையிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்து விடுகிறார். திருமணத்திற்குப் பிறகு மொத்த குடும்பத்திற்கும் நடுவே சரஸ்வதி எம்பிஏ படிக்க வில்லை என்கிற உண்மை தெரியவந்து பெரிய கலவரம் ஆகி விடுகிறது. இந்த அதிர்ச்சி தாங்காமல் கோதைக்கு நெஞ்சுவலி வந்து தற்போது வரை சரஸ்வதியை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கம்பெனியை நன்றாக டெவலப் செய்ய வேண்டும் என தமிழ் நினைத்து போராடிக் கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

கம்பெனிக்கான ஆர்டரை பெற தமிழ் ஒரு நிறுவனத்திற்கு செல்கிறார். அங்கு கம்பெனி பற்றி ஆங்கிலத்தில் உரையாடும்மாறு கேட்கிறார்கள். ஆங்கிலத்தில் ஒழுங்காக பேசத் தெரியாமல் தமிழ் தடுமாறுகிறார். உங்களால் ஆங்கிலத்தில் கூட ஒழுங்காக பேச முடியவில்லை நீங்கள் எப்படி இந்த ப்ராஜெக்டை சரியான நேரத்தில் முடித்து தருவீர்கள் என கூறி திட்டுகின்றனர். இதனால் விரக்தி அடைந்து வெளியே வரும் தமிழை மறுபடியும் அந்த கம்பெனி ஊழியர் அழைத்து உங்களுக்கு இரண்டாவதாக வாய்ப்பு தருகிறோம் எனக் கூறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!