சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, ஏற்க மறுக்கும் சொக்கலிங்கம் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ ரிலீஸ்!

0
சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, ஏற்க மறுக்கும் சொக்கலிங்கம் - 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ ரிலீஸ்!
சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, ஏற்க மறுக்கும் சொக்கலிங்கம் - 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ ரிலீஸ்!
சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, ஏற்க மறுக்கும் சொக்கலிங்கம் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் சரஸ்வதியை பெண் பார்க்க வருவதற்காக சொக்கலிங்கத்திடம் கோதை அனுமதி கேட்க, சரஸ்வதியின் படிப்பு பற்றிய உண்மை தெரிந்ததும் அவர் மறுப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

சீரியல் ப்ரோமோ

சமீப காலமாக விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்துக்கு முன்னேறி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் சில முக்கியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதுவரை சரஸ்வதி மீதான தனது காதலை அம்மா கோதையிடம் சொல்ல முடியாமல் தமிழ் தவித்து நிற்க, அவரே சரஸ்வதியை பெண் கேட்கும் படி முடிவு செய்கிறார். மறுபக்கத்தில் கோதை குடும்பத்தில் கார்த்திக், வசுந்தராவின் திருமணம் தொடர்பான சில பிரச்சனைகள் எழுந்திருக்கிறது.

பாரதி, கண்ணம்மா பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் தமிழுக்கு சரஸ்வதியை திருமணம் செய்து வைப்பதற்காக சொக்கலிங்கத்திற்கு போன் செய்யும் கோதை, சரஸ்வதியை எங்கள் வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைக்கிறீர்களா என்று கேட்கிறார். மேலும் நாளை பெண் பார்க்க வருவதாகவும் சொல்கிறார். தன்னை அண்ணன் என்று உரிமையோடு அழைக்கும் கோதையின் வார்த்தையை தட்ட முடியாத சொக்கலிங்கம், சரி என்று ஒப்புக்கொள்கிறார். இப்போது சரஸ்வதியின் படிப்பு விஷயம் தனது அம்மாவுக்கு தெரியக்கூடாது என நினைக்கும் தமிழ், சரஸ்வதியின் வீட்டுக்கு செல்கிறார்.

சரவணன் கடையில் அர்ச்சனா செய்த மோசடி, குடும்பத்தை வரவைக்க டிக்கெட் அனுப்பிய சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

அங்கு, கோதைக்கு சரஸ்வதியின் படிப்பு விஷயம் பற்றி தெரியாது அதனால் அவர் MBA படித்திருப்பதாக பொய் சொல்ல வேண்டும் என தமிழ் வேண்டுகோள் வைக்கிறார். ஆனால், தமிழின் வார்த்தையை கேட்டு கோபப்படும் சொக்கலிங்கம், நான் பொய் பேச கூடாது என சொல்லி கொடுப்பவன், என்னிடமே வந்து பொய் சொல்லவேண்டும் என்று சொல்கிறீர்களா, இப்படியெல்லாம் பொய் சொல்லி தான் இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்றால் அது வேண்டாம் என்று மறுப்பது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!