சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, படிப்பு பற்றி கேட்கும் லேகா – அதிர்ச்சியில் தமிழ்! வெளியான ப்ரோமோ!

0
சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, படிப்பு பற்றி கேட்கும் லேகா - அதிர்ச்சியில் தமிழ்! வெளியான ப்ரோமோ!
சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, படிப்பு பற்றி கேட்கும் லேகா - அதிர்ச்சியில் தமிழ்! வெளியான ப்ரோமோ!
சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, படிப்பு பற்றி கேட்கும் லேகா – அதிர்ச்சியில் தமிழ்! வெளியான ப்ரோமோ!

சரஸ்வதியை பெண் பார்க்க வரும் இடத்தில், அவரின் படிப்பு குறித்து ஒரு பிரச்சனையை உருவாக்க நினைக்கிறார் லேகா. ஆனால் ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்து பெண் பார்க்கும் படலத்தை பாட்டி சிறப்பாக நடத்தி முடிப்பது போல ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ப்ரோமோ ரிலீஸ்

விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது தான் தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமணம் கைகூடி வந்திருக்கிறது. இதுவரை படித்த பெண் தான் தன்னுடைய வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும் என்ற கோதையின் முடிவில் இருந்து சரஸ்வதி எப்படி தப்பிப்பார் என இந்த சீரியலின் கதைக்களம் விறுவிறுப்பாக வெளியானது. ஆனால் இந்த உண்மைகள் எதுவும் கோதைக்கு தெரியாமலேயே தற்போது பெண் பார்க்கும் சடங்கு வரை ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நகர்ந்திருக்கிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சூட்டிங்கில் தூங்கும் இனியா – எழில் பதிவிட்ட போட்டோ!

இப்போது சரஸ்வதி வீட்டுக்கு பெண் பார்க்க கோதை குடும்பத்தினருடன் வரும் சந்திரலேகா, எந்த கல்லூரியில் படித்த, உனக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் என சரஸ்வதியிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார். இந்த கேள்வியால் அதிர்ந்து போன சரஸ்வதி பதில் தெரியாமல் விக்கித்து நிற்கிறார். இவரை குறுக்கிடும் வசுந்தரா, நாம் பொண்ணு பார்க்க வந்திருக்கிறோமா அல்லது வேலைக்கு இன்டெர்வியூ எடுக்க வந்திருக்கிறோமா என சரஸ்வதிக்கு ஆதரவாக பேசுகிறார்.

மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்! ப்ரோமோ ரிலீஸ்!

ஆனால், லேகாவின் கேள்வியால் கோபப்படும் பாட்டி, என்ன இப்படி கேள்வி கேட்கிறீர்கள், சரஸ்வதி நீ போய் அந்த சர்டிபிகேட்டை எடுத்து கொண்டு வந்து காட்டு என சொல்ல, தமிழ் என்ன நடக்க போகிறது என முழித்து கொண்டிருக்கிறார். இப்போது பாட்டியை சமாதானம் செய்யும் கோதை, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு போன்ற நல்ல விஷயத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதை விட வேற என்ன வேண்டும். எங்களுக்கு சரஸ்வதியை பிடித்திருக்கிறது. கூடிய சீக்கிரம் நீ எங்கள் வீட்டுக்கு மகாலட்சுமியாக வர வேண்டும் என்று சொல்வது போல வெளியான ப்ரோமோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here