விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் கோதை மீரா கிருஷ்ணன் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் கோதை மீரா கிருஷ்ணன் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் கோதை மீரா கிருஷ்ணன் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் கோதை மீரா கிருஷ்ணன் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அம்மாவாக நடித்து வரும் நடிகை மீரா கிருஷ்ணன் வெள்ளித்திரையில் நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் இவர் வெள்ளி திரையில் எப்போது தோன்றுவார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

நடிகை மீரா கிருஷ்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30க்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் சீரியலில் தமிழுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை மீரா கிருஷ்ணனின் நடிப்பு பரப்பப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே சன்டிவியில் நாயகி சீரியலில் நாயகனின் அம்மாவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். பிறகு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், வந்தாள் ஸ்ரீதேவி, சித்தி 2 சீரியலில் வில்லி வேடம் என தனது நடிப்பில் சிறந்து கதாபாத்திரங்களை கொடுத்து வருகிறார். இவர் 2012-ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக பொக்கிஷம் சீரியலில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பின் பார்ட்டி கொண்டாடிய வருண் & அக்ஷரா – வைரலாகும் புகைப்படங்கள்!

கேரளாவை சேர்ந்த இவர் முறைப்படி நடனம் கற்றுக்கொண்ட பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழா ஒன்றில் நடனம் ஆடியதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார். இவர் 2003-ம் ஆண்டு வெளியான மார்க்கம் படத்தில் முன்னணி நடிகரான நெடுமுடி வேணுவுடன் நடிக்க தொடங்கினார். 2004-ல் மஞ்சு போல் ஒரு பெண்குட்டி படத்திலும் நடித்திருந்தார். நடன ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட மீராவுக்கு தற்போது இரு மகன்கள் உள்ளனர். இவருக்கு வயது 36 தான் ஆகிறது. ஆனால் சீரியலில் தன்னை விட வயது அதிகமான நடிகருக்கு அம்மாவாக கோதை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!

இந்த கேரக்டர் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அம்மா கேரக்டரை செண்டிமெண்டாக கொண்டு செல்வது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் இவர் நான் வெள்ளித்திரையில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிப்பதற்கும் தயார் என்று கூறியுள்ளார். இதனால் இனி இவர் வெள்ளி திரையிலும் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!