சந்திரகலாவின் திட்டங்களை தெரிந்து கொண்ட தமிழ், கார்த்திக் வசு நிலை என்ன? இன்றைய ‘தமிழும் சரஸ்வதியும்’ எபிசோட்!

0
சந்திரகலாவின் திட்டங்களை தெரிந்து கொண்ட தமிழ், கார்த்திக் வசு நிலை என்ன? இன்றைய 'தமிழும் சரஸ்வதியும்' எபிசோட்!
சந்திரகலாவின் திட்டங்களை தெரிந்து கொண்ட தமிழ், கார்த்திக் வசு நிலை என்ன? இன்றைய 'தமிழும் சரஸ்வதியும்' எபிசோட்!
சந்திரகலாவின் திட்டங்களை தெரிந்து கொண்ட தமிழ், கார்த்திக் வசு நிலை என்ன? இன்றைய ‘தமிழும் சரஸ்வதியும்’ எபிசோட்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழிடம் மகாபலிபுரத்தில் நடந்தது பற்றி வசுவிற்கு தெரியும் என தமிழின் அத்தை சொல்கிறார். பின் வசு நன்றாக இருக்க வேண்டும் என சரஸ்வதி கோவிலில் அர்ச்சனை செய்ய வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும்:

இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழிடம் வந்து அவரது அத்தை முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்கிறார். அப்போது மகாபலிபுரத்தில் கார்த்திக் வசு குடித்துவிட்டு ரூம் போட்டது எல்லாம் சந்திரலேகாவின் திட்டம் தான் என சொல்கிறார். இது வசுவிற்கு கூட தெரியும் என சொல்ல அதை கேட்டு தமிழ் அதிர்ச்சி அடைகிறார். தமிழ் நீங்க குடும்பத்தை பிரிப்பதற்காக எதுவும் சொல்லவில்லையே என கேட்க அப்படி எல்லாம் இல்லை கோதை மீது எனக்கு கோவம் இருக்கிறது ஆனால் அதற்காக நான் இப்படி எல்லாம் செய்யமாட்டேன் நீங்க சென்று வசுவிடம் கேளுங்கள் என சொல்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த அருண் – போட்டோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

பின் சரஸ்வதி மின்னலுடன் கோவிலுக்கு வருகிறார். சரஸ்வதி அர்ச்சனை செய்ய தேங்காய் வாங்க இன்னைக்கு என்ன விசேஷம் என மின்னல் கேட்கிறார். அப்போது சரஸ்வதி நான் என் தங்கை பெயரில் அர்ச்சனை செய்ய இருக்கிறேன் என சொல்கிறார். இன்னும் அந்த வீட்டிற்கு நீ மருமகளாக போகவில்லை ஆனாலும் அந்த குடும்பத்தின் மேலே எவ்வளவு அக்கறை என மின்னல் கேட்க, அவள் பாவம் வீட்டிற்கு வந்த அன்னைக்கே வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டது அதனால் அவளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என சரஸ்வதி கேட்கிறார். பின் அர்ச்சனை செய்ய கொடுக்க தேங்காய் அழுகி இருக்கிறது.

அதனால் ஐயர் எதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதாக சொல்கிறார். அதனால் சரஸ்வதி வருத்தப்படுகிறார். பின் தமிழ் வசுவை அழைத்து மகாபலிபுரத்தில் நடந்தது உன் அம்மா திட்டமா என கேட்கிறார். அப்போது வசு என்ன செய்வது என தெரியாமல் இருக்க உண்மையை சொல்லு என தமிழ் கேட்கிறார். அப்போது வசு ஆமாம் மாமா ஆனால் அதை எல்லாம் கார்த்திக் மேலே இருக்கும் காதலால் தான் இப்படி செய்தேன் என சொல்கிறார். தமிழ் வார்த்தைக்கு ஒரு தடவை பாரம்பரிய குடும்பம் என உன் அம்மா சொல்ல, ஆனால் நீங்க நடந்து கொள்வது இப்படி இருக்கிறது என சொல்கிறார்.

கண்ணன் செய்த காரியத்தால் கோவத்தில் திட்டும் மூர்த்தி, ஆதரவாக பேசும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது வசு தமிழ் காலில் விழுந்து இதை எல்லாம் கார்த்திக் மேலே உள்ள பாசத்தில் தான் செய்தேன் என சொல்ல, உன் அம்மா கல்யாண வீட்டில் நடந்து கொள்வதே சரி இல்லை ஆனால் நீ அப்படி இல்லை ஒழுங்காக நடந்து கொள் என சொல்கிறார். பின் சரஸ்வதி தமிழிற்கு போன் செய்கிறார். தமிழ் நான் உடனே வருகிறேன் என சொல்ல, சரஸ்வதி அப்பா உடன் வேலை செய்பவர் நீங்க சொன்னீங்களே கோதை இண்டஸ்ட்ரீஸ் அவங்க மிகப்பெரிய ஆளுங்கள் உங்க பொண்ணு ரொம்ப தெளிவு பெரிய ஆளுங்களை பிடித்திருக்கார் என சொல்கிறார். மற்றவர் என்ன சொல்றீங்க என கேட்க, இவங்க பொண்ணு சரஸ்வதி தமிழை காதலிக்கிறார் என சொல்லி நக்கலடிக்கிறார்.

படிக்காமல் இருந்தாலும் அவங்க பொண்ணு நல்ல திட்டமிட்டு செய்திருக்கிறார். கோதை இண்டஸ்ட்ரீஸ் இரண்டாவது மருமகள் கூட பெரிய கோடீஸ்வரி மகள் என சொல்லி சரஸ்வதி அப்பாவை கிண்டல் செய்கிறார். பின் தமிழ் சரஸ்வதியை சந்திக்கிறார். அவரிடம் தேங்காய் அழுகியது பற்றி கேட்க, தமிழ் அதெல்லாம் நம்பாதே என சொல்கிறார். கடவுள் செய்வது எல்லாம் சரியாக தான் இருக்கிறது என சொல்ல, தமிழ் குடும்பத்தில் நடப்பது எல்லாம் சொல்ல வேண்டாம் என நினைத்தேன் என தமிழ் சொல்கிறார்.

வெண்பாவின் முகத்திரையை கிழித்த அஞ்சலி, கண்ணம்மா உடன் வாழ முடிவு செய்யும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இது நம்ம குடும்பம் என சரஸ்வதி சொல்ல, நீ நினைப்பது சரிதான் என நடந்தது எல்லாம் சொல்கிறார். இந்த விஷயம் கார்த்திக் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என சொல்கிறார். எல்லாத்துக்கும் சந்திரகலா தான் காரணம் என்று சொல்கிறார். அப்போது சரஸ்வதி காபியில் மருந்து கலந்து கொடுத்ததை நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here