‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் தாமரை – ஷாக் வோட்டிங் ரிப்போர்ட! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்” நிகழ்ச்சி எட்டாவது வாரத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த வாரம் வீட்டில் இருந்து தாமரை வெளியேற்றப்படுவார் என வெளியான செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
பிக்பாஸ் எலிமினேஷன்:
பிக்பாஸ் சீசன் 5 ஆனது 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்.3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது ஏழு வாரங்கள் கழித்து எட்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற குழப்பம் மக்களிடம் இருந்து கொண்டே வருகிறது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பிரியங்கா, தாமரை இடையே பெரிய சண்டை நடந்தது. வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் தாமரைக்கு தலைவர் ஆகும் தகுதி இல்லை என ப்ரியங்கா சொன்னது ரசிகர்களை வெறுப்படைய செய்தது. ஆனால் அந்த இரவே தாமரைக்கு முத்தம் கொடுத்து பிரியங்கா சமாதானம் செய்தது போல காட்டப்பட்டது.
விக்னேஷ் சிவனுடன் திருமணத்திற்கு பின் நயன்தாராவின் ‘மாஸ்டர்’ பிளான் – ரசிகர்கள் உற்சாகம்!
அதே போல கனாகாணும் காலங்கள் டாஸ்கில் ப்ரியங்கா வாத்தியார் பேச்சை கேட்காமல் இருந்தார். அதன் பின் டாஸ்க் இறுதியில் நல்ல மாணவியாக இருக்கிறார். பிரியங்காவின் நண்பர் அபிஷேக் உள்ளே சென்று பிரியங்கா வெளியில் எப்படி தெரிகிறார் என்பதை சொல்லி புரிய வைத்திருப்பாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. மேலும் தாமரை ஆரம்பத்தில் இருந்தே ஒரே மாதிரி தான் இருக்கிறார். பிரியங்கா தான் மாறி மாறி நடந்து கொள்கிறார். ஆனால் இன்றைய முதல் ப்ரோமோவில் அமீர் தாமரை பற்றி தான் பேசி இருக்கிறார்.
தனது காதலரை அறிமுகம் செய்து வைத்த ‘ரோஜா’ சீரியல் ப்ரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அவர் நடிப்பது போல தெரிகிறது என சொல்கிறார். அதற்கு நிரூப் இல்லை என சொல்ல, அது தான் அவரது கேம் பிளான் என்பது போல பேசுகிறார். இதை எல்லாம் வைத்து பார்த்தால் பிரியங்கா காப்பற்றப்பட வேண்டும் என பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது. மேலும் தாமரையை வெளியேற்ற பல முயற்சிகள் நடப்பது போல காட்டப்படுகிறது . பிரியங்காவிற்கு அறிவுரை சொல்லவே அவருக்கு மிகவும் நெருக்கமான அபிஷேக், அமீர், சஞ்சீவ் ஆகியோரை வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே அனுப்பி இருக்கிறார்களா என சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அதனால் இந்த வாரம் தாமரை தான் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது.