பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்த தாமரை செல்வி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்த தாமரை செல்வி - உற்சாகத்தில் ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்த தாமரை செல்வி - உற்சாகத்தில் ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்த தாமரை செல்வி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்து போடும் பதிவுகள் அனைத்தும் வைரலாகி வரும் நிலையில் தற்போது தாமரை செல்வியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தாமரை செல்வி:

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடிப்பவர்கள் மற்றும் கலந்து கொள்பவர்கள் என்றாலே மக்கள் மத்தியில் அதிக புகழடைந்து விடுகின்றனர். அடுத்தகட்டமாக அவர்கள் வெள்ளித்திரையில் தங்கள் பயணத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் குவிய தொடங்கி அடுத்தடுத்து முன்னேற்ற பாதையில் செல்ல தொடங்கி விடுகின்றனர். இதனால் விஜய் டிவி வாய்ப்பு என்பது பலருக்கும் பெரும் கனவாகவே உள்ளது. அந்த வகையில் சாதாரண குடும்பத்தில் இருந்து நாடக தொழிலை செய்து வந்த தாமரை செல்வி என்பவருக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மூர்த்தியை விட அதிகம் சம்பளம் வாங்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ஷாக் ரிப்போர்ட்!

டிவி & பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தெரியாமல் தான் இதில் இவர் கலந்து கொண்டதாக கூறி வந்தார். தனக்கு அதிகமான கடன் இருக்கிறது. இதற்காக ஓய்வில்லாமல் உழைத்து வருவதாகவும் கூறினார். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றாக சமைத்து கொடுத்து அசத்தி வந்தார். மேலும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் மற்றவர்களுக்கு மிகவும் டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் துணிச்சலாக விளையாடி வந்தார். இதனால் பிக் பாஸ் வீட்டிற்க்கு உள்ளேயும், வெளியிலும் அதிக ஆதரவு தாமரைக்கு கிடைத்து வந்தது.

தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய “அறந்தாங்கி நிஷா” – வைரலாகும் வீடியோ!

இதனால் நிகழ்ச்சியின் இறுதி வாரம் வரை தாமரை வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு அதில் கலந்து கொண்ட அனைவரும் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. தற்போது தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து தனது வீட்டிற்க்கு சென்று தனது மாமியாரிடம், கணவன், குழந்தை சகிதமாக காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிகம் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here