விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் தாமரை? ரசிகர்கள் கொந்தளிப்பு!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் தாமரை? ரசிகர்கள் கொந்தளிப்பு!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் தாமரை? ரசிகர்கள் கொந்தளிப்பு!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் தாமரை? ரசிகர்கள் கொந்தளிப்பு!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இறுதி சுற்றிற்கான டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய எபிசோடிற்கான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 90 நாட்களை கடந்துள்ளது. இன்னும் ஒரு சில வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. தற்போது 8 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில் இந்த வாரம் இறுதி சுற்றிற்கு நேரடியாக ஒரு போட்டியாளர் செல்ல இருக்கிறார். அதற்கான முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் பேசி ஒருவரை போட்டியில் இருந்து நீக்க வேண்டும். அப்போது போட்டியாளர்கள் இணைந்து நிரூப்பை வெளியேற்றினர்.

டிச.30 முதல் ஜனவரி 2 வரை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

பின் முட்டை உடைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டி தொடங்கப்பட்டு நீண்ட நேரம் ஆகி கூட போட்டியாளர்கள் யாரும் விளையாட்டை தொடங்கவில்லை. அதனால் திட்டமிட்டு அமீர் சென்று தாமரையின் முட்டையையும், ராஜு பாவ்னி முட்டையை மட்டும் டார்கெட் செய்தனர். அதில் அமீர் முட்டையை எடுக்க செல்லும் போது பிரியங்கா அமீர் முட்டையை காப்பாற்றி வைத்தார். அதனால் தாமரைக்கு கோவம் வந்தது.

உண்மையை மறைத்த பள்ளி நிர்வாகம், அதிர்ச்சியில் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மீண்டும் மீண்டும் தாமரையை வெறுப்பேத்தி பிரியங்கா அவரை கோவப்படுத்தினார். அதனால் தாமரை பிரியங்காவை எதிர்த்து வர முதலில் பிரியங்கா தாமரையை தள்ளுகிறார். அப்போது தாமரை அமைதியாக இருக்க மீண்டும் பிரியங்கா 2 முறை தள்ளுகிறார். அதனால் கோவப்பட்ட தாமரை நானும் தள்ளவா என பிரியங்காவை தள்ளுகிறார். உடனே தாமரை தன்னை தாக்கி விட்டார் பிக்பாஸ் என ப்ரியங்கா கூச்சலிடுகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் இருவரும் சண்டை போட்டு கொள்கின்றனர்.

இருவரின் சண்டையும் குழாயடி சண்டை போல மாறியது. ப்ரியங்கா தாமரைக்கு பிக்பாஸ் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் பல முறை பிக்பாஸை அழைத்தார். ஆனால் வெளியே இருந்து பார்த்தால் இருவர் மீதும் தான் தப்பு இருக்கிறது. மறுபக்கம் ராஜு பாவ்னியை தாக்க தான் செய்தார். விளையாட்டில் இது போல நடப்பது சகஜம் தான். இது பற்றி கமல் பேச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here