பிக் பாஸ் பெண் பிரபலத்தை புகழ்ந்த தளபதி விஜய் – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

0
பிக் பாஸ் பெண் பிரபலத்தை புகழ்ந்த தளபதி விஜய் - அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் பெண் பிரபலத்தை புகழ்ந்த தளபதி விஜய் - அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் பெண் பிரபலத்தை புகழ்ந்த தளபதி விஜய் – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பலர் தற்போது சினிமாவில் கலக்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும், வாரிசு படத்தில் பிக்பாஸ் நடிகை சம்யுக்தா நடிக்க உள்ள நிலையில், அவரை நடிகர் விஜய் புகழ்ந்துள்ள செய்தியை அவரே நெகிழ்ச்சியாக சொல்லி இருக்கிறார்.

வாரிசு படம்:

தமிழ் சின்னத்திரையில் பிரமாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தமிழில் இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஆறாவது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் சினிமா வாய்ப்புகளை பெற்று பிரபலமாகி உள்ளனர். அந்த வகையில், நடிகை சம்யுக்தாவும் தற்போது சினிமாவில் பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதாவது அவர் நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

உயிர்பிழைத்து மீண்டும் வந்த யுவா? மீராவை அடைவாரா? – கண்ணான கண்ணே சீரியல் அதிரடி திருப்பம்!

Exams Daily Mobile App Download

மேலும் அந்த படத்தில் சம்யுக்தா நடிப்பது குறித்து அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் இந்த படத்தில் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் விஜய் சம்யுக்தாவை அழகாக இருக்கீங்க என சொன்னதாக கூறி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் ரொம்ப பஞ்சுவலிட்டியான மனிதர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அமீர் பாவ்னி அஜித் அவர்களின் துணிவு படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!