சன் டிவி தாலாட்டு சீரியல் ஒளிபரப்பு நேரம் திடீர் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
சன் டிவி தாலாட்டு சீரியல் ஒளிபரப்பு நேரம் திடீர் மாற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவி தாலாட்டு சீரியல் ஒளிபரப்பு நேரம் திடீர் மாற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவி தாலாட்டு சீரியல் ஒளிபரப்பு நேரம் திடீர் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் டிவியில் மத்திய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலாட்டு சீரியல்:

சன் டிவியில் சீரியல் என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதிலும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. மதிய நேரத்தில் ஒளிபரப்பான வள்ளி, சந்திரலேகா போன்ற சீரியல்களின் வெற்றி இந்த கருத்தை உறுதி செய்யும் வகையில் இருக்கும். அந்த வகையில் தற்போது மத்திய நேரத்தில் பீக் டைமிங் ஆன 2:30 மணிக்கு சன் டிவியில் தாலாட்டு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்ருதி மற்றும் கிருஷ்ணா இருவரும் ஜோடியாக முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சௌந்தர்யா பேச்சை கேட்க மறுக்கும் கண்ணம்மா, அப்போ பாரதியின் நிலைமை? சீரியலில் அடுத்த திருப்பம்!

இருவருக்கும் தனித்தனியாக முன்னரே ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்ருதி சன் டிவியில் பல வருடங்களுக்கு முன்னர் நடித்த தென்றல் மற்றும் விஜய் டிவியில் ஆபீஸ் சீரியல் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர். கிருஷ்ணா சன் டிவியில் மெகா ஹிட்டான தெய்வமகள் தொடர் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். இருவரும் முன்னதாக திரைப்படங்களில் நடித்துள்ள போதிலும் சீரியல்கள் தான் இவர்களுக்கான அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

ஜீ தமிழ் சத்யா & ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல்களுக்கு எண்ட் கார்டு – கிளைமாக்ஸ் படப்பிடிப்பு!

இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் தாலாட்டு சீரியல் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல திருப்பங்களுடன் சுவாரசியம் குறையாமல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதவாது தாலாட்டு ஒளிபரப்பாகும் மதியம் 2:30 மணிக்கு அருவி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ள காரணத்தினால் தாலாட்டு சீரியலின் நேரம் 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here