‘தல’ என்று அழைப்பதை நிறுத்துங்கள் – ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமாரின் வேண்டுகோள்!

0
'தல' என்று அழைப்பதை நிறுத்துங்கள் - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமாரின் வேண்டுகோள்!
'தல' என்று அழைப்பதை நிறுத்துங்கள் - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமாரின் வேண்டுகோள்!
‘தல’ என்று அழைப்பதை நிறுத்துங்கள் – ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமாரின் வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் அஜித் குமார், இனிமேல் தன்னை தல என்ற பட்டப் பெயர்களுடன் அழைக்க வேண்டாம் என கூறி தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகரின் வேண்டுகோள்

தென் இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி கதாநாயகர்களில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் அஜித் குமார். தமிழ் சினிமாவின் 90களில் தனது நடிப்பு பணியை துவங்கிய நடிகர் அஜித் குமாருக்கு பல மொழிகளை சார்ந்த ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. தற்போது 50 வயதான நடிகர் அஜித் குமார் ஏறக்குறைய 60 சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் குமரன் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!

அந்த வகையில் 1990ம் ஆண்டு வெளிவந்த ‘என் வீடு என் கணவர்’ என்கிற திரைப்படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அஜித் குமாரை ஒரு கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தது ‘அமராவதி’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, தீனா, சிட்டிசன், வரலாறு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் அஜித் குமாரின் சினிமா வாழ்க்கையில் ஒரே ஏறுமுகம் தான்.

குறிப்பாக இந்த திரைப்படங்கள் நடிகர் அஜித் குமாருக்கு தென் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பெயரையும், புகழையும் சம்பாதித்து தந்தது. தவிர மங்காத்தா, பில்லா போன்ற மாஸ் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித் குமாரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’, ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற சிறப்பு பெயரிட்டு அழைத்தார்கள். இந்த பெயர் தான் இன்று வரையும் அவரது திரைப்படங்களில் உபயோகிக்கப்பட்டு வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை VJ சித்ராவின் ஒரு ஆண்டுகால நினைவலைகள் – ரசிகர்கள் கவலை!

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தன்னை பட்டப் பெயரை வைத்து கூப்பிடுவதை தவிர்க்கும் படி தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதாவது, ஊடக மக்கள், பொது மக்கள், ரசிகர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் தன்னை பற்றி எழுதும் போதும், பேசும் போதும் அஜித் குமார் என்கிற தன்னுடைய இயற் பெயரை வைத்தோ அஜித் என்றோ AK என்றோ அழைதால் போதுமானது. மேலும் தல என்றோ வேறு ஏதாவது பட்டப்பெயர்களை வைத்தோ அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!