தல அஜித் ‘வலிமை’ படத்தின் சூப்பர் அப்டேட் – இன்று பட காட்சிகள் வெளியீடு!

0
தல அஜித் 'வலிமை' படத்தின் சூப்பர் அப்டேட் - இன்று பட காட்சிகள் வெளியீடு!
தல அஜித் 'வலிமை' படத்தின் சூப்பர் அப்டேட் - இன்று பட காட்சிகள் வெளியீடு!
தல அஜித் ‘வலிமை’ படத்தின் சூப்பர் அப்டேட் – இன்று பட காட்சிகள் வெளியீடு!

ரசிகர்கள் காத்திருந்த வலிமை திரைப்படத்தின் அப்டேட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

வலிமை அப்டேட்:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 2 வருடங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரசிகர்களிடம் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. வலிமை திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கண்ணனாக மாறி தான் அந்த சீனில் நடித்தேன்’ – மனம் திறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம்!

மேலும் வலிமை திரைப்படத்திற்கு BGM கிங் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் நாங்க வேற மாரி பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை திரைப்படம் 2022 பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா மகன் பிறந்தநாள் விழாவில் சீரியல் பிரபலங்கள் – ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அஜித்தின் சண்டை காட்சிகள் மட்டுமே முழுக்க முழுக்க இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை தொடர்ந்து விரைவில் டீசரும், படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. வலிமை அப்டேட் என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆகி வந்த நிலையில் தற்போது #ValimaiGlimpse என்ற ஹேஷ்டேக்கிலும் வலிமை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!