ரஷ்யாவில் சூட்டிங் முடிந்தும் பைக்கில் சுற்றும் தல அஜித் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
ரஷ்யாவில் சூட்டிங் முடிந்தும் பைக்கில் சுற்றும் தல அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்!
ரஷ்யாவில் சூட்டிங் முடிந்தும் பைக்கில் சுற்றும் தல அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்!
ரஷ்யாவில் சூட்டிங் முடிந்தும் பைக்கில் சுற்றும் தல அஜித் – வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் தனக்கொரு தனி இடம் பிடித்தவர் நடிகர் அஜித். இவர் இளம் வயது முதலே பைக் மற்றும் கார் ரேஸ்களில் பங்கேற்ற நிலையில், ரஷ்யாவில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தனது இருசக்கர வாகனத்திலேயே பயணிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைப்பார்கள். இந்நிலையில் அவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

Telegram பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!

இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக நடிகர் அஜித் ரஷ்யா சென்றுள்ளார். அஜித்குமார் நடிகராக மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங், கார் ரேஸ், பைக் ரேஸ் என்று பல துறைகளில் ஆர்வத்துடன் இருப்பவர். மேலும் அந்த துறைகளில் பல சாதனைகளை செய்துள்ளார். அவர் நடிகராக இல்லையென்றால் பைக் ரேஸராக வந்திருப்பேன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது ரஷ்யாவில் இருக்கும் அவர், தனது இருசக்கர வாகனத்திலே 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அஜித் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் செல்வது போலவும், பைக் ரேஸ் உடையுடன் அஜித் ரஷ்யாவில் தனது நண்பருடன் இருப்பது போலவும் புகைப்படங்கள் வௌியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து அஜித்குமாருக்கு நெருக்கமான சில நபர்கள், நடிகர் அஜித் தனது இருசக்கர வாகனம் மூலமாகவே உலக சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

ஏற்கனவே அவர் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தின் மூலமாக சென்றிருந்தார். அப்போது, சுமார் 10 ஆயிரத்து 800 கிலோமீட்டர் வரை பயணம் செய்துள்ளார். விரைவில் அடுத்தடுத்து பல்வேறு நாடுகளிலும் நடிகர் அஜித்குமார் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிப்பு மட்டுமில்லாமல் பல துறைகளில் ஆல் ரவுண்டராக வலம் வருவதால் தான் அவருக்கும் இன்னும் ரசிகர்கள் வட்டம் பெருகி கொண்டே செல்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!