
தமிழகத்தில் பிப்.5 தைப்பூச திருவிழா – 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படும். இதனை முன்னிட்டு பக்தர்கள் கோயில்களுக்கு செல்ல ஏதுவாக நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரயில்:
தமிழகத்தில் நடப்பாண்டு பிப். 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தைப்பூசத்தன்று முருகனை வழிபட்டால் தீயது அகன்று நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தைப்பூச திருவிழாவின் நிகழ்வுகளில் ஒன்றான சுவாமி திருக்கல்யாணம் இன்று பழனியில் நடைபெற்றது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு -பிப்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!
அதனைத் தொடர்ந்து நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை காண ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பழனி கோயிலில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் திருக்கோயிலிலும் நாளை தைபூசத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் நாளை (பிப். 04) முதல் அடுத்த 3 நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருத்தணிக்கு சுவாமி தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.