தமிழகத்தில் ஜூன் 24 முதல் 27 வரை ஜவுளி கடைகள் திறப்பு – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தடுப்பு நடவடிக்கையாக நகை மற்றும் ஜவுளி கடைகள் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜவுளி கடைகள் திறப்பு
கொரோனா இரண்டாவது அலை எதிரொலியாக தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தில் இருந்து கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டு, 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – எமிஸ் இணையத்தில் பதிய உத்தரவு!
இதற்கிடையில், ஜவுளி தயாரிக்கும் பணிகளுக்கு மட்டும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மூடப்பட்டிருக்கும் ஜவுளி, நகைக் கடைகள் திறப்பது குறித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம், நேற்று (ஜூன் 23) நடைபெற்றது. அக்கூட்டத்தில், ‘திருமண நிகழ்வுகளில் மக்கள் கலந்து கொள்ள அரசு அனுமதித்துள்ள நிலையில், ஜவுளி மற்றும் நகைகள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதனால் கடைகளை மீண்டுமாக திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஜவுளி, நகைக் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 6 மாதங்களுக்கான சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை ரத்து செய்ய வேண்டும். மேலும் 50 நாட்களுக்கும் மேலாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 24 முதல் 27 வரை, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்’ என ஆலோசிக்கப்பட்டு, பின்னர் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.