தமிழகத்தில் புது துணிகள் வாங்க குவியும் மக்கள் – ஜவுளி உற்பத்தி பாதிப்பு.. ஊழியர்கள் போராட்டம்!
திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டண உயர்வு மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்:
தமிழகத்தில் சிறு குறு வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மற்றும் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கான கட்டணம் ஆகியவற்றை மின்வாரியம் உயர்த்தியுள்ளது. இதனை கண்டித்து தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆடைகளை வாங்கி வருகின்றனர்.
TNPSC குரூப் 4 2023: Slow Learner தேர்வர்களுக்கு ஜாக்பாட்.. இதை பாருங்க முதல்ல!!
இத்தகைய நேரத்தில் மின் கட்டண, மூலப்பொருள் உயர்வு மற்றும் சந்தையின் மந்த நிலை ஆகிய காரணங்களால் விசைத்தறி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி காடா துணி உற்பத்தி நிறுவனத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக இன்று திருப்பூர் மற்றும் கோவையில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் 25 ஆம் தேதி வரை தொடரும் என தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.