தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13 ல் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாரம் வாரியாக கல்வி அலுவலகங்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்புவதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.

பாடப்புத்தகம் விநியோகம்

கடந்த இரண்டரை வருட காலமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு இணைய வழி மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தி வந்தனர். கொரோனா குறைந்த நிலையில் மட்டுமே மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதன் காரணமாக சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.

பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக்கிங் அறிவிப்பு – முடிவுக்கு வரும் WFH முறை?

அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 1700 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தமிழ் மொழியை முதன் மொழியாக கொண்டு செயல்படும் தனியார் பள்ளிகள் போன்றவற்றிற்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 1 ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டின் பாடப்புத்தகங்கள் அண்மையில் நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு வந்தன. மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு,வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டார கல்வி அலுவலகங்களுக்கும் பாட புத்தகங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2490 பாடப்புத்தகங்களும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 75,400 புத்தகங்கள், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 26,400 புத்தகங்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 200 முதல் பருவ பாட புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!