தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்!
தமிழகம் முழுவதும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்காக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
புத்தகங்கள் வழங்கல்
கடந்த இரண்டரை வருட காலமாக கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் முறையில் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை கற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா குறைந்த நிலையில் மட்டுமே மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பின் காரணமாக மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் ரத்து ஏன்? தொடக்க கல்வி இயக்ககம் விளக்கம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், கடந்த 2 வாரத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டார கல்வி அலுவலகங்களுக்கும் பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து, சேலம் மாவட்டத்திற்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், அயோத்தியாப்பட்டணம் அரசு பள்ளி, சுற்றி உள்ள மாவட்டத்திற்கு மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும், சிலுவம்பாளையத்தில் ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும், சங்ககிரி கல்வி மாவட்டத்திற்கு ஓமலூர் காமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும், ஆத்தூர் மாவட்டத்துக்கு ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஜூன் 10-ந் தேதிக்குள் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு விட வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.