TN TET 2-ம் தாள் தேர்வு குறித்த வழிமுறைகள் – தேர்வர்கள் கவனத்திற்கு!!!

0
TN TET 2-ம் தாள் தேர்வு குறித்த வழிமுறைகள் - தேர்வர்கள் கவனத்திற்கு!!!
TN TET 2-ம் தாள் தேர்வு குறித்த வழிமுறைகள் - தேர்வர்கள் கவனத்திற்கு!!!
TN TET 2-ம் தாள் தேர்வு குறித்த வழிமுறைகள் – தேர்வர்கள் கவனத்திற்கு!!!

தமிழகத்தில் அனைத்து வித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் டெட் 2-ம் தாள் தேர்வு பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெற உள்ளது. இதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

தேர்வு வழிமுறைகள்:

தமிழக பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த டெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். ஏற்கனவே 2022-ம் ஆண்டுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து டெட் 2-ம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 1,886 பேர் எழுத விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு தேதி மாற்றப்பட்டு டெட் 2-ம் தாள் தேர்வு பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்வர்களுக்கு முதல்கட்ட ஹால்டிக்கெட் (District Admit Card) வெளியாகி இருக்கிறது.

TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ !

அதனை தொடர்ந்து தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எந்த தேர்வு மையம் என்பது மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். அதன்படி 03.02.2023 அன்று நடைபெறும் தேர்வுக்கு Venue Admit Card நாளை (31.01.2023) வெளியிடப்படும். தேர்வர்கள் தேர்விற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in இணையதளத்தில் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!