தமிழக பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ஊரக திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு!

0
தமிழக பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - ஊரக திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - ஊரக திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ஊரக திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு ஊரக பகுதி மாணவர்களுக்கு 2021-22 ம் கல்வியாண்டிற்கான ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு ஜனவரி 30ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வு குறித்த சில முக்கிய செய்தி குறிப்பை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

திறனாய்வுத் தேர்வு:

தமிழகத்தில் 2021-2022-ம்‌ கல்வியாண்டில்‌ அங்கீகாரம்‌ பெற்ற பள்ளிகளில்‌ பயிலும்‌ ஒன்பதாம்‌ வகுப்பு மாணவர்கள்‌, 2022 ஜனவரி மாதம்‌ 30-ஆம்‌ தேதி ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்‌ என அறிவிக்கப்படுகிறது. அரசு அங்கீகாரம்‌ பெற்ற பள்ளிகளில்‌ 2021- 2022 கல்வியாண்டில்‌ 9-ம்‌ வகுப்பில்‌ பயிலும்‌ மாணவ மாணவியர்‌ இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள்‌. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ தேர்வரின்‌ பெற்றோர்‌ / பாதுகாவலரின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.1,00,000 /- மிகாமல்‌ உள்ளது என்பதற்கு வருவாய்‌ துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல்‌ வேண்டும்‌.

தமிழகத்தில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விபரம் இதோ!

தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ மாணவ, மாணவியர்கள்‌ தேர்வுக்கான கட்டணம்‌ ரூ, 5/- சேவைக்‌ கட்டணம்‌ ரூ. 5/- மொத்தமாக ரூ. 10/- வீதம்‌ ஆன்லைன் மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன்‌ பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்‌. தேர்விற்கு விண்ணப்பிக்க நாள்‌ 09.12.2021 முதல்‌ 20.12.2021 வரை என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதற்குப்‌ பின்னர்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ 100 நபர்களுக்கு (50 மாணவியர்‌ 4 50 மாணவர்‌) 9ம்‌ வகுப்பு முதல்‌ 12ம்‌ வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும்‌ காலத்திற்கு படிப்புதவித்‌ தொகை ஆண்டு தோறும்‌ ரூ. 1000/- வீதம்‌ வழங்கப்படும்‌.

தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – அரசுக்கு கோரிக்கை!

தேர்வெழுத வரும்‌ தேர்வர்கள்‌ கருப்பு நிற பந்துமுனை பேனாவினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌. நகராட்சி மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ படிக்கும்‌ மாணவ/மாணவிகள்‌ விண்ணப்பிக்க இயலாது. தேர்வர்கள்‌ ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்து வர வேண்டும்‌. மேலும் போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here