தமிழகத்தில் உதவி பேராசிரியர்களுக்கு நிலைப்பு சான்றிதழ்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் உதவி பேராசிரியர்களுக்கு நிலைப்பு சான்றிதழ்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் உதவி பேராசிரியர்களுக்கு நிலைப்பு சான்றிதழ்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் உதவி பேராசிரியர்களுக்கு நிலைப்பு சான்றிதழ்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் 2015ம் ஆண்டு பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்களுக்கு இதுவரை பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படமால் உள்ளது. அதனால் உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

உதவி பேராசிரியர்களுக்கான சான்றிதழ்

தமிழகத்தில் அரசு சார்பாக செயல்படும் கலை மற்றும் கல்லூரிகளில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 1093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் பொதுவாக உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்த முதல் வருடம் தகுதிகாண் பருவமாக கருதப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஓராண்டில் ஊழியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த கால நடத்தைகள், பணித்திறமை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். இந்த தகுதிகாண் பருவம் நிறைவடைந்தவுடன் இவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி இவர்களுக்கு 2016ம் ஆண்டில் பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 1093 உதவி பேராசிரியர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு , பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் பெற முடியாமல் உள்ளன. அதாவது, உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்து 5வது ஆண்டில் முதலாவது பணிநிலை மற்றும் ரூ.1000 தர ஊதிய உயர்வு வழங்கப்படும். அதன் பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் 2வது பணி நிலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.

TN TET தேர்வில் புதிய மாற்றங்கள் – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து அடுத்த 3 ஆண்டுகளில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வு கிடைக்கும். அதன்படி இந்த ஆண்டு இணைப் பேராசிரியர் பதவி உயர்வு கிடைத்திருக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இவர் தனது கோரிக்கையில், கடந்த 2015ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 1039 உதவி பேராசிரியர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனவும் இதுவரை இச்சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதற்கு கல்லூரியில் இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் குளறுபடிகள் தான் முக்கிய காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here