தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!

0
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதற்கிடையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

தற்காலிக ஆசிரியர் நியமனம்:

தமிழகத்தில் 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக் குழுவே மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இதனிடையே தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு ஜூலை 4 முதல் ஜூலை 6ம் தேதி மாலை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

தமிழகத்தின் தேனியில் பள்ளிகள் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி!

இதற்கிடையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். அதில், தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது. முதலமைச்சரின் அறிவுரைப்படி தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருகிறது. மேலும் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடப்படும். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதி, மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!