தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க நேற்றை கடைசி நாளாகும். இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் இருந்து மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்பதை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை தகவல்:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்தது. இதில் மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற ஊதிய அடிப்படையில் இந்த பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திருத்திய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முன்னதாக வெளியிட்டார். அதில், திறன் உள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி இல்லை என்றால் உடனே பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவும் ஒமைக்ரானின் புதிய வகை BA வைரஸ் – புதிய கட்டுப்பாடுகள் அமல்!
மேலும் இப்பணிக்கு ஜூலை 4-ந் தேதி முதல் ஜூலை 6ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தது. அதன்படி கடந்த 4-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. மேலும் ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்