தமிழகத்தில் விரைவில் கோவில்கள் திறப்பு – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் விரைவில் கோவில்கள் திறப்பு - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் விரைவில் கோவில்கள் திறப்பு - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் விரைவில் கோவில்கள் திறப்பு – அமைச்சர் பேட்டி!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் இன்று திருச்சி மலைக்கோவிலுக்கு ரோப்கார் அமைப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் விரைவில் கோவில்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கோவில்கள் திறப்பு:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக சார்பில் பல தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் முக ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு அதற்கான அரசாணைகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, தனது தேர்தல் வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி போன்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி – மத்திய அமைச்சருக்கு கோரிக்கை!

இன்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கு ரோப் கார் அமைப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் சேகர் பாபு அவர்கள், செய்தியாளர்களிடம் பேசினார். அதில், திமுக தேர்தல் அறிக்கையில் ஐந்து கோவில்களுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும் என்று அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

அதனால், சோளிங்கர் நரசிம்மர் கோயில், திருநீர்மலை முருகன் கோயில், திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகிய 5 கோவில்களுக்கு ரோப் கார் வசதி செய்வது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், தமிழகத்தில் கோவில்கள் திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும். கோவில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!