பைக் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – படுகாயம், சுயநினைவு இழப்பு! தீவிர சிகிச்சை!

0
பைக் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் - படுகாயம், சுயநினைவு இழப்பு! தீவிர சிகிச்சை!
பைக் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் - படுகாயம், சுயநினைவு இழப்பு! தீவிர சிகிச்சை!
பைக் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – படுகாயம், சுயநினைவு இழப்பு! தீவிர சிகிச்சை!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகரான சாய் தரம் தேஜ், தனது ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் செல்லும் பொது விபத்தில் சிக்கியுள்ளார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாலை விபத்து:

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் தரம் தேஜ். இவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. இவர் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகனவார். தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சாய் தரம் தேஜ், ரே, சுப்பிரமணியம் பார் சேல், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஹைதராபாத்தில் மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் ஜூபிலி ஹில்ஸில் இருந்து காச்சிபவுளி என்ற இடம் நோக்கி சென்றபோது இரவு 8.30 மணி அளவில் பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா? இனி இவருக்கு பதில் இவர்!

இந்த விபத்தில் அவருக்கு தலை, மார்பு, கை மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த அடிபட்டது. சாய்தரம் தேஜின் வலது கண் மற்றும் மார்பில் பலத்த காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹெல்மெட் இருந்த போதிலும், சாய்தரம் தேஜ் விபத்தின் தீவிரம் காரணமாக பலத்த காயமடைந்ததாக தெரிகிறது. 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மெடிகோவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் ஜெனி, உண்மையை பாக்கியாவிடம் இருந்து மறைக்க சொல்லும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

சாய் தரம் தேஜ் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார். குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பைக்கில் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்து நடிகர் பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!