ஜூன் 19 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

3
ஜூன் 19 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
ஜூன் 19 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
ஜூன் 19 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலையை கருத்தில் கொண்டு தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவானது சில கட்டுப்பாடுகளுடன் ஜூன் 19ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவினை அம்மாநில முதல்வர் பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தெலுங்கானா மாநில அரசு ஜூன் 10 முதல் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை நீட்டித்து உள்ளது. அதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், காவல் துறைக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில் மாநில அமைச்சரவை சில பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தளர்வுகளை அளிக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 3வது வாரம் பள்ளிகள் திறப்பு? வெளியான முக்கிய அறிவிப்பு!

அதன்படி வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், தெலுங்கானாவில் ஊரடங்கை இன்னும் பத்து நாட்களுக்கு நீட்டிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தளர்வுகள் அமலில் இருக்கும். மக்கள் பணி முடிந்து வீட்டிற்குச் செல்ல மாலை 5 – 6 மணி வரை ஒரு மணி நேர கால அவகாசம் வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தற்போதைய தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில், தெலுங்கானாவில் 1,897 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த தொற்று எண்ணிக்கை 5,95,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 புதிய இறப்புகளுடன் மாநிலத்தில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 5.67 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர், அதே நேரத்தில் மாநிலத்தில் 24,306 பேர் சிகிச்சையில் உள்ளனர். திங்கள்கிழமை இரவு 9 மணி வரை மொத்தம் 1,66,818 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. Maglir kuluvum and other bhank loan anathum thallubadi pannu vom entru dmk party sonathu
    Ennachi patheenkala sonna vaakka kappathikonga d m k party ok

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here