டெலிகிராமில் க்ரூப் வீடியோ கால் செய்யலாம் – சிஇஒ அறிவிப்பு !

0
டெலி கிராம் க்ரூப் வீடியோ கால் வசதி - சிஇஒ அறிமுகம் !
டெலி கிராம் க்ரூப் வீடியோ கால் வசதி - சிஇஒ அறிமுகம் !
டெலிகிராமில் க்ரூப் வீடியோ கால் செய்யலாம் – சிஇஒ அறிவிப்பு !

டெலிகிராம் செயலில் வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனத்தின் சி.இ .ஓ மற்றும் செயலர் பவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

வீடியோ கால் :

தற்போதைய கால கட்டத்தில் ஆன்ராய்டு போன்கள் அதிகரித்து விட்டன. புதியப்புதிய செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய செயலிகளுக்கு பயனாளர்கள் அதிகரித்து வருவதால் அந்நிறுவனங்கள் புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இது எளிதாகவும் பயனர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறும் அமைந்து விடுகிறது. வாட்ஸ் , இன்ஸ்டாகிரம் போன்ற ஆப்களின் நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அரசின் கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலையில் உள்ளனர் அதனால் உறவினர்கள், நண்பர்களுடன் உரையாட வீடியோ கால் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றன. வாட்ஸ் ஆப்பை போல தற்போது அதிகமாக மக்கள் டெலிகிராம் செயலியையும் பயன்படுத்தி வருகின்றன.  கொரோனா பரவலால் பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பாடங்கள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது மற்ற அலுவலகங்களின் பணிகளும் , கலந்துரையாடல்களும் ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால் வீடியோ கால் தேவை அகரித்துள்ளது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பிலை – சென்னை ஆணையர் தகவல்!!!

இதனால் தற்போது டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஸ்கிரீன்-ஷேரிங், என்க்ரிப்ஷன் , நாய்ஸ் கேன்சலேஷன், வாய்ஸ் சாட் போன்ற அம்சங்களும் இடம்பெறும் என தெரிவித்துள்ளது இந்த புதிய சேவைகள் வருகின்ற மே மதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் இந்த புதிய வசதிகள் டெலிகிராம் செயலி மட்டுமின்றி டெஸ்க்டாப் மற்றும் டேப்லெட் சாதனங்களிலும் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ பவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!