IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – பிளேயிங் 11 இல் சாஹர் இல்லை?

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் - பிளேயிங் 11 இல் சாஹர் இல்லை?
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் - பிளேயிங் 11 இல் சாஹர் இல்லை?
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – பிளேயிங் 11 இல் சாஹர் இல்லை?

ஐபிஎல் 15ஆவது சீசன் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வீர்ரகள் அதகர்க்கு தயாராகும் நிலையில், தற்போது சென்னை அணிக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அணியினர் மிகவும் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.

IPL 2022:

ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள வீரர்களுக்கான ஏலம் கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூரில் நடந்தது. ஏலத்தில் சிஎஸ்கே அணி 25 வீரர்களை மொத்தம் 87 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி 5 வது முறையாக வெற்றிக் கோப்பையை பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார். இதற்கான தீவிர வியூகங்களை தோனி முன்னதாக வகுத்து வந்தார்.

Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் – ஒரு வருடம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா! அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!

இந்நிலையில், மேற்கியந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடியபோது, இந்திய வீரர் தீபக் சஹாருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இது எப்போது குணமடையும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் இன்னும் அவர் 3 வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்றும் தெரிகிறது. இதனால் சென்னை மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரும் சரியாக இல்லை என்பது தான் சோகம். அணியில் அணைத்து விஷயககளும் முன்னதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த விஷயம் அணிக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது.

சிஎஸ்கே அணி (25 பேர்):

மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டிவோன் கான்வே, சுப்ரன்ஷு சேனாபதி, ஹரி நிஷாந்த், என்.ஜெகதீசன். ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டுவைன் பிராவோ, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிடோரியஸ், மிட்செல் சாண்ட்னர், கிறிஸ் ஜோர்டன், பகத் வர்மா. தீபக் சஹார், கேஎம் ஆஷிப், துஷர் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜித் சிங், ஆடம் மில்னே, முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலாங்கி.

ஓபனர்கள்:

அணியின் ஓபனர்களுக்கான இடங்களில் ருதுராஜ் கெய்க்வாட், நியூசிலாந்து ஓபனர் டிவோன் கான்வே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மிடில் வரிசை:

மிடில் வரிசையில் பழைய சிஎஸ்கே வீரர்கள், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, கேப்டன் மகேந்திரசிங் தோனி ஆகியோர் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள்:

ஆல்-ரவுண்டர்களுக்கான இடங்களில் ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோர் இருக்கிறார்கள்.

பந்துவீச்சாளர்கள்:

பௌலர்களாக தீபக் சஹார், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் இருக்கிறார்கள். தீபக் சஹாரின் பேட்டிங் திறமை நாம் அறிந்ததே. ராஜ்வர்தன் இந்திய U-19 அணியில் குட்டி ஹார்திக் பாண்டியாவை போல் செயல்பட்டார். அடுத்து இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டனும் ஆல்-ரவுண்டராகத்தான் இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!