தமிழகத்தில் கல்வி செயலியில் வருகையை பதிவு செய்ய திணறும் ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வித்துறை கடிதம்!

1
தமிழகத்தில் கல்வி செயலியில் வருகையை பதிவு செய்ய திணறும் ஆசிரியர்கள் - பள்ளிக்கல்வித்துறை கடிதம்!
தமிழகத்தில் கல்வி செயலியில் வருகையை பதிவு செய்ய திணறும் ஆசிரியர்கள் - பள்ளிக்கல்வித்துறை கடிதம்!
தமிழகத்தில் கல்வி செயலியில் வருகையை பதிவு செய்ய திணறும் ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வித்துறை கடிதம்!

தமிழகத்தில் மாணவர்களின் வருகையை கல்வி செயலியில் தான் பதிவு செய்ய வேண்டும் என கூறிய நிலையில் அதில் உள்ள கஷ்டங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கல்வி செயலி:

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களின் வருகையை ஏடுகளில் பதிவு செய்யக் கூடாது எனவும், கல்வி செயலியின் மூலமாக தான் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மூன்றரை லட்சம் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் எப்படி 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வருகை பதிவு மற்றும் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் குரல் எழுப்பியுள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும், பள்ளியில் நெட்ஒர்க் சேவைகள் மிகவும் வேகமாக கிடைத்தாலே மாணவர்களின் வருகையை பதிவு செய்ய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பதை காட்டிலும் இந்த வேலை தான் மிகவும் முக்கியமா எனவும், திடீரென கல்வி செயலி முடக்கப்பட்டுவிட்டால் 80 லட்ச மாணவர்களின் வருகையை எப்படி தெரிந்துகொள்வது என பல கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், இது போன்ற இணையதள செயல்பாடுகளிலேயே முழு கவனத்தையும் செலுத்தினால் மாணவர்களுக்கு எப்போது கற்பிக்க முடியும்.

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு

மேலும், தமிழகத்தில் கற்பித்தல் பணிக்கு வாய்ப்பளிக்காமல் இது போன்ற அவசியமற்ற செயல்பாடுகளை புகுத்தினால் கல்வியின் தரம் எப்படி உயரும் என பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏட்டிலும், நோட்டிலும் வருகையை பதிவு செய்வது தான் பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என ஆசிரியர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி செயலியினால் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Education minister have no idea about the importance of education that’s why this confusion. Once system gets corrupted

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!