கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் – தீயில் கருகிய சான்றிதழ்கள்!

2
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் - தீயில் கருகிய சான்றிதழ்கள்!
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் - தீயில் கருகிய சான்றிதழ்கள்!
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் – தீயில் கருகிய சான்றிதழ்கள்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதால் மாணவிக்கு நீதி வேண்டும் என அந்த பள்ளியை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். அதில் அங்கே பணிபுரிந்து வந்த ஆசிரியர்களின் பட்ட சான்றிதழ்கள் தீயில் கருகி நாசமாகியது. அதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

ஆசிரியர்கள் வேதனை:

கடந்த ஜூலை 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறப்பிற்கு பள்ளி நிர்வாகம் சரியான காரணம் எதுவும் சொல்லாத நிலையில், பெற்றோர்கள் தொடர்ந்து சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அரசும் அது குறித்து எந்த அறிவிப்பும் எடுக்காத நிலையில் அந்த தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள்.

Exams Daily Mobile App Download

மேலும் பள்ளி வாகனங்களை தீ வைத்து கொளுத்தினார்கள். மேலும் வகுப்பறைகளும் பள்ளி அலுவலகமும் முற்றிலும் தீக்கிறையானது. அதில் ஏகப்பட்ட பொருள்கள் சேதாரம் ஆனது. அதில் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களின் பட்ட சான்றிதழும் தீயில் எரிந்து நாசமாகியது. அது குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், பணியில் சேரும் போது பள்ளி நிர்வாகம் எங்களுடைய சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டுள்ளது. அதுவும் இப்போது தீயில் கருகிவிட்டது. தற்போது அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது.

கோவில்களில் திருமணம் செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்!

அதனால் வேறு பள்ளியில் வேலை தேடலாம் என்றாலும், சான்றிதழ் இல்லாததால் தவித்து வருகிறோம். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் தவித்து வந்தோம். இந்த ஆண்டு தான் நிலைமை சரியானது ஆனால் மீண்டும் இப்படி ஒரு நிலைமை வந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளி இயங்குமா என தெரியவில்லை. இந்த இக்கட்டான நிலையில், சான்றிதழ் இல்லாத எங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கிறது. அதனால் இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு அவரவர் சான்றிதழ்களின் நகல்கள் அடிப்படையில் புதிய சான்றிதழ்களை உடனே வழங்க அரசு முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Aru u a mad, it is not yet decided then how you are telling that it is sucide. If your baby is in this situation you will react the same, selfish. மனசாட்சி இல்லாத மண்ணாங்கட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!