தமிழகத்தில் ஆசிரியர் & மாணவர் பணியிட நிர்ணயம் – தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

0
தமிழகத்தில் ஆசிரியர் & மாணவர் பணியிட நிர்ணயம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழகத்தில் ஆசிரியர் & மாணவர் பணியிட நிர்ணயம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழகத்தில் ஆசிரியர் & மாணவர் பணியிட நிர்ணயம் – தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 01.08.2022 நிலையில் ஆசிரியர் / மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பணியிட நிர்ணயம்:

தமிழகத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அரசாணையின்படி , ஒவ்வொரு ஆண்டும் காலமுறை தோறும் ( Periodically ) ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்வது போன்று இவ்வாண்டும் 01.08.2022 இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் 01.08.2022 அன்று பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் எவ்வித தவறுக்கும் இடமின்றி விவரங்களைப் பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குவது சார்பாகவும், மேலும் படிவங்களைப் பூர்த்தி செய்யும் போது கீழ் குறித்த அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.

  • 01.08.2022 அன்று பள்ளி மாதாந்திர அறிக்கை (பள்ளியின்‌ மாணவர்‌ வருகைப்‌பதிவேட்டினை ஒப்பிட்டு பார்த்து) மற்றும்‌ EMIS அடிப்படையிலும்‌ மாணவர்கள்‌பதிவின்படி படிவங்களில்‌ விவரங்கள்‌ பூர்த்தி செய்யப்பட வேண்டும்‌.
  • தமிழ்வழி மற்றும்‌ ஆங்கில வழி மாணவர்களை அந்தந்த வகுப்புகளுக்கு தனித்தனியாக கணக்கிட்டு வகுப்புவாரியாக அளிக்கப்பட வேண்டும்‌.
Exams Daily Mobile App Download
  • (சிறுபான்மை மொழிப்‌ பள்ளிகளுக்கு / இருமொழிப்பள்ளிகளுக்கு (MINORITY LANGUAGE / BILINGUAL LANGUAGE) தனித்தனியாக அனைத்து படிவங்களையும்‌ (படிவம்‌ 1முதல்‌ 8 வறை) பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்‌.
  • அரசு / ஊராட்சி / நகராட்சி 7 மாநகராட்சி / தொடக்க மற்றும்‌ நடுநிலைப்பள்ளிகளுக்கு படிவம்‌ – 1 முதல்‌ படிவம்‌ 8 வரை தனித்தனியாக வழங்கப்பட வேண்டும்‌.
  • ஒவ்வொரு ஊராட்சி , நகராட்சி 7 மாநகராட்சி / அரசு தொடக்கப்பள்ளி மற்றும்‌ நடுநிலைப்பள்ளிகளில்‌ அரசால்‌ அனுமதிக்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்கள்‌ பணியிடங்களின்‌ விவரங்களை பள்ளியின்‌ அளவைப்‌ பதிவேட்டின்படி ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம்‌ செய்திடல்‌ வேண்டும்‌. அவ்வாறு பதிவேற்றம்‌ செய்யப்படும்போது அப்பணியிடங்கள்‌ கடந்த ஆண்டுகளில்‌ ஆசிரியரின்றி உபரி எனக்‌கண்டறியப்பட்டு இயக்குநரின்‌ பொதுத்‌தொகுப்பிற்கு சரண்‌ ‘செய்யப்பட்டிருந்தால்‌ அப்பணியிடங்களை எக்காரணம்‌ கொண்டும்‌ மீளவும்‌ அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக்‌ கருதி பதிவேற்றம்‌ செய்தல்‌ கூடாது என்பதை கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

இந்தியாவில் திருநங்கைகளுக்கு சுகாதார திட்டம் – மத்திய அரசு ஒப்பந்தம்!

  • அரசாணையின்படி ஆசிரியர்‌ / மாணவர்கள்‌ விகிதாச்சாரம்‌ துல்லியமாகக்‌ கணக்கிடப்பட்டு ஆசிரியருடன்‌ உபரி 7, ஆசிரியரின்றி உபரி 7 கூடுதல்‌ தேவை ஆகியவை அளிக்கப்பட வேண்டும்‌.
  • படிவங்களில்‌ அளிக்கப்படும்‌ விவரங்கள்‌ தவறானவை எனப்‌ பின்னாளில்‌ கண்டறியப்பட்டால்‌ அதற்கு சம்மந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பாவர்‌.
  • மாணவர்‌ எண்ணிக்கையில்‌ சந்தேகம்‌ இருப்பின்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ வட்டார வள மைய ஆசிரியர்‌ பயிற்றுநர்‌ கொண்ட குழு பள்ளியினை பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்‌.
  • படிவம்‌ -5 மற்றும்‌ படிவம்‌ -6 ஒல்‌ சார்ந்த பள்ளியில்‌ ஆசிரியருடன்‌ உபரியாக உள்ள ஆசிரியர்‌ பெயர்‌ அன்னார்‌ அப்பள்ளியில்‌ சேர்ந்த நாள்‌ மற்றும்‌ ஓய்வு பெறும்‌ நாள்‌ ஆகியவை எவ்வித தவறுமின்றி பூர்த்தி செய்யப்பட வேண்டும்‌.
  • ஒன்றிய அளவில்‌ ஒட்டு மொத்தமாக (வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ சேர்ந்து), பள்ளிகள்‌ மற்றும்‌ நிர்வாக வாரியாக விவரங்கள்‌ பெறப்பட்டு வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ கையொப்பம்‌ பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மேலொப்பம்‌ செய்யப்பட வேண்டும்‌.
  • மேற்படி ஒன்றிய அளவில்‌ பெறப்பட்ட விவரங்களை பள்ளிகள்‌ மற்றும்‌ நிர்வாகவாரியாக கல்வி மாவட்ட அளவில்‌ தொகுத்து சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ கையொப்பம்‌ இடப்பட வேண்டும்‌.
  • தொடக்கப்‌ பள்ளி 7 நடுநிலைப்பள்ளிகள்‌ தனித்தனியாக இடைநிலை ஆசிரியர்‌ 7 பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்‌ பணியிட விவரம்‌, ஆசிரியருடன்‌ உபரி, ஆசிரியரின்றி உபரி மற்றும்‌ கூடுதல்‌ தேவை விவரங்கள்‌ வருவாய்‌ மாவட்ட அளவில்‌ தொகுத்து சார்ந்த முதன்மைக்‌ கல்வி அலுவலரால்‌ தனியாக அளிக்கப்பட வேண்டும்‌.
  • மேலும்‌, மேற்குறித்த 8- படிவங்களை அந்தந்த மாவட்டங்கள்‌ சார்பாக வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ / மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மேற்படி பணியினை முடித்து வருவாய்‌ மாவட்ட அளவில்‌ தொகுத்து புத்தக வடிவில்‌ தயார்‌ செய்தும்‌, குறுந்தகட்டில்‌ (பதிவேற்றம்‌ செய்தும்‌ கீழ்க்குறித்த நாட்களில்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலக கண்காணிப்பாளர்‌ மற்றும்‌ பிரிவு எழுத்தர்‌ நேரடியாக இவ்வியக்ககத்திற்கு வந்து சரிப்பார்த்து ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.
  • எனவே, மேற்குறித்த நடைமுறைகளை உரிய கால அட்டவணைக்குள்‌ தவறாமல்‌ முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்விஅலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!