மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி TDS சலுகை! மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி TDS சலுகை! மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி TDS சலுகை! மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி TDS சலுகை! மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

இன்று நாடாளுமன்றத்தில், மத்திய பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு TDS சலுகை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்

மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு:

2022- 2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மேலும் தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் 2 வது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் இதுவாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10 வது மத்திய பட்ஜெட் தாக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு உரையாடல் அளித்த மத்திய நிதியமைச்சர் , இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2% ஆக இருக்கும், மேலும் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்டாக இருக்கும்.பின்பு கொரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

IPL 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் குறிவைக்கும் 18 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்த வகையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு, TDS சலுகை அளிக்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் மாநில அரசு பணியாளர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான பிடித்தம் 10% இருந்தது. ஆனால் 2022- 2023 ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மாநில அரசு ஊழியர்கள் பயன் பெறும் விதமாக தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான பிடித்தம்10% லிருந்து 14%ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!