TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தேர்வு தேதி & விண்ணப்ப முறை விளக்கம்!

0
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தேர்வு தேதி & விண்ணப்ப முறை விளக்கம்!
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தேர்வு தேதி & விண்ணப்ப முறை விளக்கம்!
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தேர்வு தேதி & விண்ணப்ப முறை விளக்கம்!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் காலியாக இருக்கும் சில பணியிடங்களுக்கு புதிய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான சோதனை தேதி, பதிவு நிலை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்பு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது வளாகங்களில் பல புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு திட்டங்களின் மூலம் வளாகத்திற்கு வெளியேயும், வளாகத்திற்கு உள்ளேயும் ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இப்போது 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – திருநெல்வேலியில் முகாம்!

அந்த வகையில் டிசிஎஸ் அட்லஸ் பணியமர்த்தல் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் ‘TCS அட்லஸ் பணியமர்த்தல், புதுமையான ஆர்வம் உள்ள திறமையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரவு மைய அணுகுமுறையின் மூலம் வணிக செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று நம்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த TCS அட்லஸ் பணியமர்த்தல் திட்டம், சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வணிகங்களுக்கு உதவும் என்றும் IT சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • கல்வித் தகுதி: 2020, 2021 & 2022 ஆண்டில் இருந்து M.Sc (கணிதம்/புள்ளியியல்/பொருளாதாரம்) மற்றும் MA (பொருளாதாரம்)
  • பதிவு நிலை: திறந்திருக்கும்
  • தேர்வு தேதி: விரைவில் அறிவிக்கப்படும்

  • நேர்காணல் தேதி: விரைவில் அறிவிக்கப்படும்
  • விண்ணப்ப செயல்முறை:
  • டிசிஎஸ் நெக்ஸ்ட்ஸ்டெப் போர்ட்டலில் விண்ணப்ப படிவத்தைப் பதிவு செய்து பூர்த்தி செய்யவும்.
  • அதில், விண்ணப்பத்தின் நிலை ‘விண்ணப்பம் பெறப்பட்டது’ என்று இருக்க வேண்டும்.
  • இது ஒரு கட்டாய நடவடிக்கை ஆகும்.

இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் TCSன் மின்னஞ்சல் ஐடி [email protected] மற்றும் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணை 1800 209 3111 அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!