TCS நிறுவனத்தில் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – 2 முக்கிய திட்டங்கள்!

2
TCS நிறுவனத்தில் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - 2 முக்கிய திட்டங்கள்!
TCS நிறுவனத்தில் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - 2 முக்கிய திட்டங்கள்!
TCS நிறுவனத்தில் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – 2 முக்கிய திட்டங்கள்!

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், தமிழகத்தில் இரண்டு புதிய திட்டங்கள் மூலமாக 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணபதி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

இந்திய ஐடி துறை கொரோனாவுக்கு முன்பும் சரி, பின்பும் சரி தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தொடங்கி ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் டிசிஎஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? முதல்வர் ஆலோசனை!

முதலீட்டார்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற தலைப்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்த தொழில் முதலீட்டு ஈர்ப்பு நிகழ்ச்சியில் டிசிஎஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி கணபதி சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இரண்டு மாதங்களில் 35க்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது பெரிய சாதனை. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு டிசிஎஸ் நிறுவனம் தனது பங்களிப்பை செய்து வருகிறது. சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்தம் 92 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் பெண்கள் மட்டும் 42 சதவிகிதம் பேர் ஆகும்.

TN Job “FB  Group” Join Now

தற்போது இன்னும் 2 புதிய திட்டங்களை தொடங்க உள்ளோம். மேலும் ரூ.876 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.900 கோடி திட்டத்திற்கு தமிழக அரசிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்கள் மூலமாக 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டு திட்டங்களும் கொரோனா காரணமாக தொழில் முனைவோருக்கு உதவியாக இருக்க தேவையான அம்சங்களை கொண்டுள்ளது. கொரோனா காரணமாக எங்களது நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Hi sir ,i have completed BCA and i have an expierence in customer care associate from 3years i need a job for my expierence .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here