TCS புதிய நிதியாண்டில் 500,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு – அறிவிப்பு!

0
TCS புதிய நிதியாண்டில் 500,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு - அறிவிப்பு!
TCS புதிய நிதியாண்டில் 500,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு - அறிவிப்பு!
TCS புதிய நிதியாண்டில் 500,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு – அறிவிப்பு!

தற்போது துவங்கியுள்ள 2021-22 ஆம் புதிய நிதியாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் 500,000 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி
அறிவித்துள்ளார்.

TCS வேலைவாய்ப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உருவான கொரோனா பேரலையால் இந்தியாவில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனிடையே நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்கள் தனது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இதனிடையே தற்போது நாடு முழுவதும் கொரோனா 2 அலை பாதிப்புகள் குறைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 500,000 புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

இதற்கிடையில் கடந்த ஆண்டு இந்தியாவில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக 96% TCS நிறுவன ஊழியர்கள் WFH முறையில் பணி செய்து வந்தனர். சுமார் 166 பில்லியன் டாலர் பங்குச் சந்தை மதிப்புள்ள இந்நிறுவனம், இப்போது 2025 ஆம் ஆண்டுக்குள் 25% க்கும் அதிகமான ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்யத் தேவையில்லை என்று கணித்துள்ளது. தவிர 250,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட IT சேவை நிறுவனமான இன்போசிஸ், தனது செயல்முறையை மாற்ற திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் WFH மூலம் உற்பத்தித்திறனை 25% அதிகரிக்க முடியும் என்று TCS நம்புகிறதாக CEO சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மற்ற இந்தியப் பொருளாதாரத்தைப் போலவே, கொரோனவால் TCS நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் கிட்டத்தட்ட 14% சரிந்தது. ஆனால் 2021- 22, முதல் காலாண்டின் நிகர வருமானம் 32% அதிகரித்துள்ளதாக TCS தெரிவித்துள்ளது. இதனிடையே இந்நிறுவனம் கிட்டத்தட்ட 45,000 பேரை வேலைக்கு அமர்த்தியது. தவிர அமெரிக்காவை பொருத்தளவு கூகுள் உட்பட சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலைக்கு மாறினால் ஊதியக் குறைப்பைக் காணலாம் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!