TCS நிறுவனத்தில் 1,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – 2023 ஆம் ஆண்டிற்குள் திட்டம்!

0
TCS நிறுவனத்தில் 1,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் - 2023 ஆம் ஆண்டிற்குள் திட்டம்!
TCS நிறுவனத்தில் 1,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் - 2023 ஆம் ஆண்டிற்குள் திட்டம்!
TCS நிறுவனத்தில் 1,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – 2023 ஆம் ஆண்டிற்குள் திட்டம்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் சுமார் 1,000 கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது நியூஜெர்சி கிளையில் 1,000 புதிய பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ள TCS நிறுவனத்தின் வணிகங்களை டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இப்போது இந்த புதிய பணியமர்த்தல் வரும் 2023ம் ஆண்டிற்குள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் உள்ளூர் தகவல் தொழில்நுட்பத் திறமைகளை ஆதரிப்பதற்காக, TCS நிறுவனம் தனது STEM மற்றும் கணினி அறிவியல் கல்வித் திட்டங்களை நியூ ஜெர்சியில் 25 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இதனுடன் ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் திட்டங்களை விரிவுபடுத்த இருப்பதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நியூ ஜெர்சி கவர்னர் பில் மர்பி கூறுகையில், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நியூ ஜெர்சியில் அதன் தடத்தை விரிவுபடுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதே நேரத்தில் அதன் STEM கல்வித் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் எங்கள் எதிர்கால பணியாளர்களில் முதலீடு செய்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

திடீரென நிறுத்தப்பட்ட “பிக்பாஸ் அல்டிமேட்” நேரலை நிகழ்ச்சி – போட்டியாளர்களுக்குள் மோதல்? ரசிகர்கள் ஷாக்!

இந்த STEM என்ற சொல் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தை குறிக்கிறது குறிப்பிடத்தக்கது. இப்போது அமெரிக்காவில் உள்ள 30 நிறுவன வசதிகளில் ஒன்றான TCS எடிசன் பிசினஸ் சென்டர், நியூ ஜெர்சியில் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. இந்த நிறுவனத்தில் 3,700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தொழில் ஐடி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவது, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் நிறுவன மென்பொருள் போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் செயல்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!