TCS நிறுவனத்தின் கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் – மிஸ் பண்ணாம படிங்க!

0
TCS நிறுவனத்தின் கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் - மிஸ் பண்ணாம படிங்க!
TCS நிறுவனத்தின் கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் - மிஸ் பண்ணாம படிங்க!
TCS நிறுவனத்தின் கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் – மிஸ் பண்ணாம படிங்க!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கற்கும் வகையில் பல புதிய பாடப்பிரிவுகளில் படிப்புகளை கற்பிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த படிப்புகளில் பலவற்றில் சில இலவசமாகவும், சிலவற்றிற்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS அறிவிப்பு:

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது அலுவலகங்களில் அதிக அளவிலான பணியாளர்களை புதிதாக பணியமர்த்தி வருகிறது. இதற்காக பல புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது. மேலும் கூடுதலாக பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்கியதை அடுத்த ஆண்டின் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, TCS நிறுவனம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தொடரக்கூடிய மற்றும் சிறந்த தொழில் வல்லுனர்களிடமிருந்து கற்றல் அனுபவத்தை பெறக்கூடிய பல படிப்புகளை கற்பிக்க இருக்கிறது. TCS ஆல் வழங்கப்படும் இந்த படிப்புகளில் சில இலவசமாகவும், சிலவற்றிற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wipro நிறுவனத்தில் 30,000 Freshers க்கு வேலைவாய்ப்பு – காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

இந்தப் படிப்புகளை இளங்கலை (UG), மற்றும் முதுகலை (PG) படித்தவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு திறனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். சில படிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற படிப்புகளைப் பற்றி மேலும் அறிய மாணவர்கள் learning.tcsionhub.in இல் அறிந்து கொள்ளலாம்.

தகவல் தொடர்பு திறன் படிப்பு (COMMUNICATION SKILLS COURSE):

வேலைவாய்ப்பைப் பெறத் தயாராகும் மாணவர்கள், வேலை செய்யும் தொழில் வல்லுநர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்களைக் கையாளும் வணிகர்கள் இந்த படிப்பில் சேரலாம். இலவச வகுப்புகள் ஒரு வர காலத்திற்கு ஏசுகப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் TCS உங்களுக்கு “தொடர்பு என்றால் என்ன, ஏன் தொடர்பு கொள்கிறோம்” என்பதை புரிந்து கொள்ள உதவும் வகையிலான பாடங்களை கற்பிக்கும்.

நேர்காணல் திறன் படிப்பு (INTERVIEW SKILLS COURSE):

நேர்காணல் என்பது கேள்வி மூலம் ஒரு தனிநபரிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான முறையான சந்திப்பு ஆகும். கடினமான நேர்காணல்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்க்க இந்தப் பாடநெறி உதவும். வேலையில் சேர தயாராக உள்ள புதியவர்களுக்காக இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவச வகுப்பான இந்த பாடம் ஒரு வார கால அளவிற்கு நடத்தப்படும்.

ரெஸ்யூம் ரைட்டிங் மற்றும் கவர் லெட்டர் கோர்ஸ் (RESUME WRITING AND COVER LETTER COURSE):

வேலையில் சேர தயாராகும் மாணவர்கள். அனுபவம் வாய்ந்த நபர்கள் வேலை மாற்றம் அல்லது சிறந்த வாய்ப்புகளை எதிர்பார்க்கும் நபர்கள் இந்த ஒரு வார இலவச வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். நன்கு எழுதப்பட்ட ரெஸ்யூம் மற்றும் பல்வேறு வகையான ரெஸ்யூம்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள இந்தப் பாடநெறி உதவுகிறது.

தமிழக அரசின் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய மாற்றம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

மேலும், இந்த பாடத்திட்டத்தில், பயனுள்ள கவர் கடிதத்தை எழுதும் போது மனதில் கொள்ள வேண்டிய கட்டமைப்பு மற்றும் புள்ளிகளை பற்றியும் கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOT மற்றும் அதன் பயன்பாடுகள்(INTRODUCTION TO IOT AND ITS APPLICATION COURSE ):

இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் (IoT) அறிமுகம் குறித்தும் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமாக புரிந்துகொள்ள இந்தப் பிரபலமான பாடத்திட்டம் உதவும். ஹோம் ஆட்டோமேஷன், ஸ்மார்ட் சூழல், ஸ்மார்ட் நகரங்கள்,சில்லறை விற்பனை, ஸ்மார்ட் ஆற்றல், ஸ்மார்ட் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு IoT டொமைன்களின் கேஸ் ஸ்டடீஸ் இந்த பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. IoT ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் அடிப்படைகள், தாக்கம் மற்றும் சாத்தியக்கூறுகளில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு இந்த பாடநெறி பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் எட்டு வாரம் நடக்கும் இந்த பாட திட்டத்திற்கு ரூ.17,700 கட்டணமாக வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!