TCS நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
TCS நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் பணிவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
TCS நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் பணிவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
TCS நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

ஆஃப் கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தலுக்கான விண்ணப்பங்களை டிசிஎஸ் வரவேற்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS பணிவாய்ப்பு:

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதிக அளவில் பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. டிசிஎஸ் ஆஃப் கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தலுக்கான விண்ணப்பங்களை டிசிஎஸ் வரவேற்பதாவும் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஐடி நிறுவனத்தில் குறைந்தது 6 முதல் 12 மாதங்கள் பணியாற்றிய பணி அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் வருகிற பிப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் விண்ணப்பதார்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப செயல்முறையை இரண்டு நிலைகளில் முடிக்க வேண்டும். தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் தகுதிச் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தேர்வு தொடர்பான விவரங்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தகுதிகள்:

பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,00,000 மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,30,000 ஊதியம் வழங்கப்படும். தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும். நேர்காணல் தேதி தேர்வுக்குப் பிறகு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் முதலில் https://nextstep.tcs.com/ ஐ திறக்க வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள Register Now என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் IT ஐ கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பதாரர் விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
  • விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்ப நிலை விண்ணப்பம் பெறப்பட்டது எனக் கூற வேண்டும்.
  • CT / DT ஐடியுடன் இரண்டாவது படி விண்ணப்ப செயல்முறை உள்ளது. https://www.tcs.com/careers/tcs-digital-hiring இணையதளத்தைத் திறந்த பிறகு, CT / DT ஐடியுடன் Apple Here என்பதைக் கிளிக் செய்து விண்ணப்ப செயல்முறையை முடிக்கவும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!